Wednesday, March 6, 2013

பிரமிக்கவைத்த பென்சில் ஓவியம்

Olga Melamory ('ஒலக மொள்ளமாரி’ இல்லேங்க..) வரைந்த இந்த ஓவியத்தை ஃபேஸ்புக்கிலோ ப்ளஸ்ஸிலோ ஒரு நண்பர் ஷேர் செய்திருந்தார். பெயர் நினைவில்லை. முதலில் அவருக்கு நன்றி.  எங்கள் நாகூர் ஓவியர் ஹாஜாபாஷா  தன் பாட்டனாரை பிரமாதமாக வரைந்திருந்த ஓவியம்தான் நான் - சிறுவயதில் - முதலில் பார்த்த பென்சில் ஓவியம். காலக்கோளாறால் நானும் ஆர்டிஸ்டாகி பிரஷ் பிடித்து அலைந்தேன் கொஞ்சகாலம். ஸ்கேன் செய்த புகைப்படத்தை வகைவகையாக ஆயிரத்தெட்டு ஃபில்டர்களுடன் நிமிடத்தில் பிரித்து மேயும் கம்ப்யூட்டர் வந்தபிறகு வரையும் ஆர்வம் எல்லாம் வற்றிப் போய்விட்டது. வேறொன்றை பிடிக்க ஆரம்பித்தேன். ஆமாம், அதேதான். சரி,  இந்த ஓவியத்தை , 'பிரமிக்கவைத்த’ லிஸ்டில் சேர்த்திருக்கிறேன். பயமுறுத்தும் லிஸ்டிலும் இணைக்கலாம். படாதபாடு படுத்தும் அரபியாயிற்றே! 


Olga Melamoryயின் மற்ற ஓவியங்களை காண :
http://www.cuded.com/2013/01/pencil-art-by-olga-melamory-larionova/

***

+

மற்ற சில ஓவியர்களின்  3D Pencil Drawings..
http://pinterest.com/countryluva3813/art-3d-pencil-drawings/

No comments:

Post a Comment