அல்லாஹ்வின் (அந்த ‘ஹ்’ ரொம்ப முக்கியம்) பாடல் அல்ல; அல்லாஹ்வைப் பற்றிய பாரதியின் பாடல் - நித்யஸ்ரீயின் இனிய குரலில். ’ஏகம்’ என்று இசை ஆல்பம் வந்திருக்கிறதாம். அதிலிருந்த ஒரு பாடலை அசனாமீர் (மரைக்காரை ’மீர்’ என்று சுருக்கி எழுதுவது மரபு)அனுப்பியிருக்கிறார். ஏதோ அவரால் முடிந்த இஸ்லாமிய ‘தாவா’. நன்றி. கேட்க நல்லாத்தான் இருக்கு அசனா, ஆனா மிருதங்கத்திற்கு பதிலாக கார்த்திக் ’தப்ஸ்’ அடித்திருந்தால் அல்லாஹூத்தஆலா இன்னும் சந்தோஷமடைந்திருப்பான்.
குறிப்பு: அல்லாஹ்வின் பாட்டாக இருப்பதால் ’ஹராம்’ அல்ல இசை என்று அன்பர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
அல்லாஹ், அல்லாஹ், அல்லாஹ்...! :