பெரும் மதிப்புக்குரிய நண்பர் ஜெயகாந்தனைப் பற்றி நான் ஒன்றும் புதிதாக சொல்ல வரவில்லை. அவர் படைப்புக்கள் மீது பெரும் மதிப்புக் கொண்டு 23 ஆண்டுகளுக்கு முன்னர் அவரைச் சந்திக்க சென்னைக்குப் போயிருந்தேன். மூன்று இலக்கியச் சந்திப்புகளில் அவருடனான உரையாடல்களை நண்பர்களுடன் பகிர்ந்திருக்கிறேன். வெலிகமவில் சம்ஸ் வீட்டிலும் கொழும்புவில் சிற்றிரஸ்ட்டிலும் புத்தளத்தில் ஜவாத் மரைக்கார் வீட்டிலுமாக. நண்பன் கவிஞர் ஜெயபாலன், அவருடனான உரையாடலை நூல் வடிவில் கொண்டு வருமாறு என்னைப் பல தடவைகள் தூண்டினார். என்னுடைய வழமையான சோம்பல் மட்டுமல்ல, இலங்கை பற்றிய அவருடைய கருத்துக்களும் கடும் காட்டமாக இருந்த அந்த நாட்களில் என்னை அந்தச் செயல்பாடுகளிலிருந்து தடுத்தது. அதற்கும் நிறையக் காரணங்கள் இருந்தன. இப்பொழுது இங்கே அவருடனான உரையாடல்களில் இடம்பெற்ற சில விடயங்களை மட்டும் இங்கு பதிவேற்றம் செய்கிறேன்- எஸ்.எல்.எம்.ஹனீபா
***
பாபர் மசூதி கட்டி எவ்வளவு நாட்கள். அப்போ இருந்தவர்கள் இந்துக்களில்லையா?
இலங்கையர்கள் என்றால் பிரமித்தோம். கேவலம் இந்தியாவையே கற்றுக் கொள்ளவில்லையே.
குடிப்பதற்காகவே வாழ்கிறேன். இது எனது பலஹீனமல்ல, கடவுளின் வரப்பிரசாதம்.
என்னைப் பொய் பேச வைத்து விட்டால் இந்த சமூகத்திற்கு வெற்றி. உண்மை பேசாதே என்றால் காத்துக் கொள்வேன்.
என்னைப் பொய் பேச வைத்து விட்டால் இந்த சமூகத்திற்கு வெற்றி. உண்மை பேசாதே என்றால் காத்துக் கொள்வேன்.
என்னைப் பொய் பேசச் சொல்கிறார்கள் இயக்கமெல்லாம்.
எதிரி இருக்கணும். அவன் எதிரியா இருக்கக் கூடாது.
பகைமை தீர்ந்திடணும். பகைவன் நண்பனாகிடணும்.
பகைமை தீர்ந்திடணும். பகைவன் நண்பனாகிடணும்.
இலங்கைக்கு வந்து பொறுக்காத தமிழன் யார்?
இலங்கையை ஒரு தம்பியாக அல்லாமல் கள்ளக் கடத்தலுக்கு ஏற்ற இடமாக மாற்றிக் கொண்டார்கள் இவர்களும்.
முதலாவது பெண்ணு கல்யாணமாகி சாத்தூரில், இரண்டாவது பெண் உயர்தரத்தில். மூன்றாவது பெண் எட்டாவது பாரத்தில்.
பாபர் மசூதி சூது மதியினர் கட்டி விட்ட பழி. பாபர் படையெடுத்து வரவில்லை. இந்தியர்கள் அழைத்து வந்தார்கள்.
பாபர் மசூதி சூது மதியினர் கட்டி விட்ட பழி. பாபர் படையெடுத்து வரவில்லை. இந்தியர்கள் அழைத்து வந்தார்கள்.
முகலாய சாம்ராஜ்யத்தின் முதல் வித்து. பாபர் மஸ்ஜித் கட்டியதை ஒரு ஹிந்து எதிர்த்தானா? வரலாற்றில் செய்தி உண்டா?
பாபர் ராமாயணத்தில், ராமரில் இந்திய இலக்கியத்தில் நம்பிக்கை வைத்தவர்.
பாபர் ராமாயணத்தில், ராமரில் இந்திய இலக்கியத்தில் நம்பிக்கை வைத்தவர்.
ராமனையும் தொழ விரும்பினார். அதனாலே அங்கு ராமனுக்கும் கோயில் கட்டினார்.
1949ல் பிரச்சினை கிளம்பியது.
பாகிஸ்தான் எனும் புத்தியைப் புகுத்தியவர்கள், பாபர் மஸ்ஜிதையும் புகுத்தினார்கள்.
கோரிக்கைகளுக்கு வரலாற்று ஆதாரம் வேண்டும்.
கோரிக்கைகளுக்கு வரலாற்று ஆதாரம் வேண்டும்.
தமிழீழம், பங்களாதேசம், பாகிஸ்தான் எல்லாம் ஒன்று.
முதல் கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரே ஏ.ஜே. கனகரட்ணா அவர்கள்தான். கதையின் பெயர் 'போர்வை'.
எனது மகனானாலும் அவன் வன்முறையை நம்பி வாள் எடுப்பானாகில் அவனுக்கு வாளே கதி.
எனது மகனானாலும் அவன் வன்முறையை நம்பி வாள் எடுப்பானாகில் அவனுக்கு வாளே கதி.
கொல்ல விரும்புபவன், கொல்லப்படுவதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
தெய்வத்தை சோதித்தீர்களானால், தெய்வம் பிசாசாகி விடும்.
பத்மநாபா, நாங்கள் மதிக்கிற முஜிபுர் ரஹ்மான்.
பிரஷர் வந்திடுச்சி. 170. குடிச்சாச் சாகுவேன் என்றார் டாக்டர். உடம்பைக் குறைத்துக் கொள் என்றார் . எழுபது சிகரட் ஏழாகியது. குடி சாயங்காலம் மட்டும். அப்புறம்தான் ஏழைகளின் தோழமை கிடைத்தது.
1959 இலிருந்து கஞ்சா அடிக்கிறேன். இதற்கு அர்த்தம் எல்லாரும் குடிங்க என்பதல்ல.
1959 இலிருந்து கஞ்சா அடிக்கிறேன். இதற்கு அர்த்தம் எல்லாரும் குடிங்க என்பதல்ல.
அந்த நாட்களிலேயே மாசமொன்றுக்கு ஏழாயிரம் லிக்கர் சாப்புக்குக் கட்டிய ஒரே மனிதர் நானாகத்தான் இருப்பேன்.
இந்தியா என்றால் ராமன் என்றுதான் அர்த்தம். தப்புச் செய்தால் ராம் ராம்.
எங்களுடைய பக்திதான் எங்களுடைய கவிதை.
எங்களுடைய பக்திதான் எங்களுடைய கவிதை.
நானொரு பாம்பாட்டி. என்னைப் போய் பாம்பைக் காட்டிப் பயங்காட்டினால்?
மனிதன் சம்பந்தப்பட்ட எல்லாமே தீயதே.
நம் உயிரில பாதி உடல்ல பாதி அப்படின்னு சொல்வோமே நம்ப பொம்பனாட்டி, பிள்ளைகள், எல்லாமே ஒரு நாள் அந்நியமாப் போவுண்டா.
விடியக் காலை நாலு மணிக்கே விஸ்கி. காலை, மத்தியானம், சாயங்காலம், இரவு என்று விடாது குடிப்பேன்.
விடியக் காலை நாலு மணிக்கே விஸ்கி. காலை, மத்தியானம், சாயங்காலம், இரவு என்று விடாது குடிப்பேன்.
ஆந்திராவில் நக்சலைட்டுகள் உண்டு. தமிழ்நாட்டில் நக்சலைட்டுக்களை ஒழித்தவர்கள் மக்கள்.
எங்களைக் கள்ளத் தோணிகள் என்றவன்கள் எல்லாம், இன்று கள்ளத் தோணிகளாயிட்டானுகள்.
உலகை ஒன்று படுத்துபவர்களாக இருக்க வேண்டும்.
உலகை ஒன்று படுத்துபவர்களாக இருக்க வேண்டும்.
யாருடன் போனவளையும் நான் பத்தினியாகக் கொள்வேன். ஆனால் என் பத்தினியை நான் யாருக்கும்...
என் தகப்பன் வண்டியை விற்றதினால்தான் என் பள்ளிப் படிப்பு நின்றது.
அப்பனின் படம் இல்லாத கவலை இன்னும் என்னை அரிக்கிறது.
அப்பனின் படம் இல்லாத கவலை இன்னும் என்னை அரிக்கிறது.
துன்பங்களைக் கண்டு அஞ்சக் கூடாது.
என்னைக் கொல்ல மாட்டார்கள் என்று தெரிந்துதான் எனக்கு திமுக அரசு காவல் போட்டது.
திமுக அரசு இல்லையென்றால் பத்மநாபா கொல்லப்பட்டிருக்க மாட்டார்.
சேகுவேரா, கெஸ்ட்ரோ அவங்கெள்ளாம் ரிஷிகள்.
சேகுவேரா, கெஸ்ட்ரோ அவங்கெள்ளாம் ரிஷிகள்.
பண்டாரநாயக்காவை விட இந்தியாவுக்கு வேறு யார் நண்பனாக இருக்க முடியும்?
இதுதான் எங்கள் உரையாடலின் சாராம்சம். இதற்கு அப்பாலும் எவ்வளவோ பேசினோம். அவற்றையெல்லாம் நான் தணிக்கை செய்து விட்டேன்.
***
நன்றி : ஹனீபாக்கா
அன்பு
ReplyDeleteஹனீபாக்கா...
ஜெயகாந்தன் எப்படி பேசுவார் என்பதை நானும் அறிவேன்.
நான் அவரைச் சந்தித்து பேசியதை
கட்டுரையில் பதிவு செய்திருக்கிறேன்.
உங்களது இந்தப் பதிவு அதைத்தான்
அடிக்கோடிட்டுச் சொல்கிறது.
பொதுவில்,
மிக அழகாக பதிவு செய்து காமித்திருக்கின்றீர்கள்.
சந்தோஷம்.
அப்போதும் போதையில்தான் இருந்தாரா தோழர்?
ReplyDeleteபோதையோ, என்னவோ தீர்க்கதரிசனமாக அப்போது இலங்கைத்தமிழர்களுக்கு எது கிடைக்குதோ அதைவாங்குங்கடா, அப்புறம் மற்றவற்றுக்காகப்போராடல்லாம்னு உரத்துச்சொல்லிக்கொண்டிருந்தான் மனிதன். எல்லாமே சிந்தியா பாலாயிற்று.
ReplyDelete