Wednesday, January 20, 2016

பிரபஞ்சன் நம்ம ஆளு !

பிரபஞ்சன் 1978-ல் எழுதிய 'சங்கம்' சிறுகதையிலிருந்து.. 


"ஒட்டக்கூத்தர் தெரியுமா?"

"ம்... யாரு?"

"அதாம்பா, சோழ ராஜாகிட்டே ஆஸ்தான கவியா இருந்தாரே அந்த ஒட்டக்கூத்தர்."

"அவரா.. தெரியும். 'உலா' பாடினவர்."

"அது எனக்குத் தெரியாது. அவரு நம்ம ஆளு."

"நம்ம ஆளா?"

"ஆமா, நம்ம ஜாதிக்காரரு."

"ஓகோ.."

"ஆமா.. இதெல்லாம் தெரிஞ்சுக்காம என்ன நீ படிக்கிறே.."

அவரைத் திருப்திப்படுத்த வேண்டும்போல அவனுக்குத் தோன்றியது.

"கம்பர் கூட நம்ப ஆளா?"

"அவர் வெள்ளாள முதலிப்பா. நம்ம ஆளு இல்லே."

"அது எப்படிச் சொல்றீங்க?.."

"கம்பனை வைச்சு ஆதரிச்சவரு சடையப்ப முதலி. அவரு வெள்ளாளர். அதனால கம்பனும் வெள்ளாள முதலியாராத்தான் இருக்கணும். வேற ஜாதியானை ஆதரிக்கிறதுக்கு சடையப்ப முதலிக்குப் பைத்தியமா பிடிச்சிருக்கு?"



No comments:

Post a Comment