வேலை - ஆத்மாநாம்
உங்கள் காலைத்தொழுகை முடிந்ததா
அவ்வளவுதான் உம் உணவு
ஊர் சுற்றாமல்
ஒழுங்காய்ப் போய்த் தூங்குங்கள்
***
ஐயோ - ஆத்மாநாம்
சொன்னால் மறக்கிறார்கள்
எழுதினால் நிராகரிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள்
***
பிரம்மராஜன் தொகுத்த 'ஆத்மாநாம் படைப்புகள்' நூலிலிருந்து (வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்) , நன்றியுடன் பதிவிடுகிறேன். ஆத்மாநாம் பற்றி ஆத்மாநாம் எழுதியது அடுத்து வரும், இன்ஷா அல்லாஹ்.
No comments:
Post a Comment