ஹனீபாக்காவின் உடல்நிலை கவலை தருகிறது. ’உடல் நலம் இன்னும் சரிப்பட்டு வரவில்லை. மனத்தோடு ஒத்துழைக்க உடல் மறுக்கிறது. கிழடு தட்டிப் போன இயந்திரம்...’ என்று மெயில் அனுப்பியிருக்கிறார். பார்த்து ஒரு மாதிரியாகிவிட்டது.. இறைவன் அவருக்கு உடல் சுகத்தைத் தரட்டும் - இந்நிலையிலும் ‘குழந்த புள்ள’யை அனுப்பி சிரிக்க வைத்ததற்காக. ஆமா, கதையில் சொல்கிற மாதிரி ’அதைப்’ பார்த்த மாமிகளெல்லாம் அலறி ஓடுவார்களா என்ன? நம்ப முடியவில்லை! - ஆபிதீன்
**
குழந்தப் பிள்ள போல...
வீட்டில் பிள்ளைகள் யாருமில்லை.
புலவர் மாமாவும் பொண்டியும் ஹாயாகக் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
மாமாவுக்கு உற்சாகம் தலைக்கேறி, மாமியைக் குஷிப்படுத்திக் கொண்டிருந்தார்.
மாமி திடீரென்று மாமாவைப் பார்த்து -
"இஞ்செ குழந்தப் பிள்ள போல அந்த வெத்தில வட்டாவை எடுத்திட்டு வாங்க ராசா" என்றார்.
மாமாக்கு இன்னும் ரெண்டு அங்குலம் கூடிப் பெய்த்து.
உடனே மாமா மறுபேச்சில்லாமல், போட்டிருந்த பெனியனையும் உடுத்திருந்த சாரனையும் களைந்தெறிந்தார். மாமா முழு நிர்வாணம். ஆறு மாத ஆண் குழந்தை போல.
வெத்தில வட்டாவத் தேடித் தேடி தவழத் தொடங்கினார். மாமியோ முகத்தில் சீலையை வாரிப் போட்டு அலறி அடித்துக் கொண்டே முற்றத்திற்கு ஓடி வந்தார்.
**
நன்றி : பெரிய குழந்தைக்கு...
கிழடு தட்டிப் போன இயந்திரம்... அப்படியெல்லாம் சொல்லாதீங்க காக்கா. வைரம் பாய்ந்த இயந்திரம் பழுதே ஆகாது இன்னும் நீண்ட நாட்கள் ஓடும்.
ReplyDeleteநன்றி,
ReplyDeleteஉங்கள் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் மனமார்ந்த நன்றிகள்.
who is followed old he is a gold
ReplyDeleteby
mubi khan