அடியிலே தாஜ் என்று சொல்வது அத்தனை சரியில்லை :)) - ஆபிதீன்
***
அடிவாரத்தில் - தாஜ்
----------------------------
எதிரே சிரஞ்சீவி மலை
சிகரத்தில்தான்
அந்த மூலிகை
செங்குத்தான அதன் பாதை
வளைந்து நெளிந்து மிரட்ட
இடையிடையேயான
குகைப்பாதைகளும்
பயம்தர உண்டு.
முயற்சிகளின் பாடம்
பச்சைக் கொடி காட்ட
கைவிரிக்கிறது அனுபவம்
வாழ்ந்தாகணும்
யோசனையோடு
அடிவாரத்தில்தான் நிற்கிறேன்.
***
நன்றி : தாஜ்
நன்றி தல...
ReplyDeleteஅடிவாரத்திலிருந்து
-தாஜ்
வாழ்ந்தேயாக வேண்டும் - அதுதான் வாழ்க்கை!
ReplyDeleteஇதை அழகுற உணர்த்தியது கவிதை!
Superb
ReplyDeleteSuperb
ReplyDelete