Wednesday, October 16, 2013

நரைத்த 'முடி’ சூடிய நாகூர் ரூமி!

நண்பரின் புதிய கோலம் நன்றாகவே இருக்கிறது. ஃபேஸ்புக்கில் ஆளாளுக்கு அவர் தாடியை வாழ்த்த , மனுசன் குஷியாகி ‘ஆஹா, ஒரு தாடிக்கு இவ்வளவு மகத்துவமா? இன்ஷா அல்லாஹ் இது வளரட்டும்!’ என்று சொல்லியிருக்கிறார். கொஞ்சம் ‘லைட்டர் வெய்ன்’இல் தாடிபற்றி சின்ன 'கவிதை'யும் எழுதியிருக்கிறார். அது தாடிக்கு கீழே இருக்கிறது! அவசியம் பார்க்கவும். தம்பி ஜாஃபர் சாதிக் Nana, You have decided to assume look of real intellectual? என்ற கேள்வியை வீச, Thambi, there are many bearded fools too in this world, Hope I am not one of them!என்று ரூமி பதில் சொல்லியிருப்பதையும் ரசித்தேன். - ஆபிதீன் 
***

***
ரொம்ப காலமாக நாடி
வைத்துவிட்டேன் தாடி!
தலைக்கு மேலே கறுப்பு, கீழே வெள்ளை
’டை’ அடிக்கும் தொல்லையே இனி இல்லை!
என் முகம் இப்போது கொஞ்சம் தடித்திருக்கிறது
என் முகநூல் நண்பர்களுக்கு இது பிடித்திருக்கிறது!
அறிவுஜீவியாட்டம் இருக்கிறதென்றார் என் தம்பி
என் அறிவு இல்லை எப்போதும் முடியை நம்பி!
கன்னத்தில் முடி வளர்ந்தால் தாடி
எண்ணத்தில் அது வளர்ந்தால், அம்மாடி!
என் தம்பிகளுக்கு நான் அண்ணன்
எனினும் இனி நான் ’முடி’சூடிய மன்னன்!
***


3 comments:

  1. தாடி...! முகத்தில் ஒரு தேஜஸ் தெரிகிறது. ஆன்மீகத்தின் நுதுவல் எட்டிப்பார்க்கிறது, எடுத்துவிடவேண்டாம் pl keep it up...

    ReplyDelete
  2. தம்பி நாகூர் ரூமி,
    தாடி ஒரு "மோடி"யாய் இருக்கிறது. கூட ஒரு சால்வை போட்டால், ரொம்ப அசத்தும். நானும் என்னுடைய தாடியை கொஞ்சம் கூட்டிக் கொண்டு வருகிறேன். எனது மனைவிக்கு படு சந்தோஷம். இப்பொழுதெல்லாம் என்னை கிழட்டுப் பயலாகப் பார்ப்பதில் இல்லாளுக்கு அப்படி என்னதான் மகிழ்ச்சியோ நானறியேன்.
    ஆபிதீன், அஸ்மாவுக்கு முன்னால் தாடியோடு போயிராதே.

    ReplyDelete
    Replies
    1. தாடியில் மறைந்திருப்பது ஹனிபாக்காதானே? அப்படியானால் ஒண்ணு கேட்கணும். தாடி வைத்தால் ‘அந்த’ விஷயத்துக்கு நன்றாக இருக்கும், பெண்களுக்கும் பிடிக்கும் என்று ஒரு பாகிஸ்தானி சொல்கிறார். உண்மையா?

      Delete