Thanks to : Karthik Velu
கரன் தாப்பர் எடுத்த பல பேட்டிகளை பார்த்திருக்கிறேன் . மிகவும் மெனக்கெட்டு கேள்விகளையும் தரவுகளையும் தயாரித்துக்கொண்டு வருவார் .கேள்விகள் வெற்று சீண்டலாக இல்லாமல் முரண்களை முன்வைத்து கேட்கப்படுவதாக இருக்கும் . பொருட்படுத்ததக்க கேள்விகளாக இருக்கும் .
பேட்டி அளிப்பவர் கொஞ்சம் மழுப்பினாலும் இதைத்தான் சொல்ல வருகிறீர்கள் இல்லையா என்று எளிதில் ஒரு மூலைக்கு அவர்களை நகர்த்திப் போய்விடுவார் . PTR ஐ அவர் எடுத்த பேட்டியில் இப்படி நெருக்க வேண்டிய தேவையே இருக்கவில்லை . பதில்கள் அனைத்தும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் இருந்தன , ஒரு மணி நேரத்துக்கும் குறைவான பேட்டி நேரம் ஆனால் கேட்க வேண்டிய எல்லா விஷயத்தையும் கேட்டுவிட்டார் PTR உம் சொல்ல நினைத்த எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் .
அண்ணாவின் தனித்தமிழ்நாடு கோரிக்கை , இந்தி திணிப்பு ,கூட்டாட்சி ,அதிகார குவிப்பு , பாகிஸ்தா பிரச்சனை , GST , மக்களவை தொகுதிகள் மறுபங்கீடு ,மொழி அரசியல் , மாநிலங்களுக்கு இடையான ஏற்ற தாழ்வுகள் என்று எல்லா கேள்விகளுமே முக்கியமானவை.
தமிழகத்தில் என்ன நிறை பிற மாநிலங்களில் என்ன குறை என்பதையும் சுருக்கமாக சுட்டியிருக்கிறார்.
எல்லா கேள்விகளுக்கும் தன்னம்பிக்கையுடனும் பொறுப்புடனும் பதில் அளித்தார் , ஆங்காங்க இடைமறிக்க முயன்ற போதும் சொல்ல வந்த கருத்தை சொல்லியே முடித்தார் .இந்தப் பேட்டியில் அவர் பேசிய விதம் திமுக வை சார்ந்த ஒரு அமைச்சர் பேசியது போல தொனிக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழகத்தின் சார்பாக ஒருவர் பேசியதை போலவே பேசியிருந்தார் .
சில பதில்கள் ஆச்சரியப்படும் வகையிலான முதிர்ச்சியை கொண்டிருந்தன . சுயமரியாதையில் தொடங்கி self determination ல் முடித்த பதில் அருமை.தமிழகத்துக்கு உள்ளேயே தமிழ் மற்றும் தமிழர்கள் குறித்து எள்ளலான சொல்லாடல்கள் சரளமாக புழங்கும் சூழலில் இது போன்ற கண்ணியமான பேட்டி ஒரு தேசிய அளவிலான ஊடகத்தில் வந்திருப்பது தமிழகத்தின் நிலைப்பாட்டை நேர்மையாகவும் ,நேர்மறையாகவும் காட்டியிருக்கிறது.
ஒரு தேர்ந்த பேட்டியாளர் எப்படி பேட்டி அளிப்பவரிடம் இருந்து தரமான பதில்களை பெறமுடியும் என்பதற்கு கரன் தாப்பர் நல்ல எடுத்துக்காட்டு. இந்த பேட்டியின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுத்தாலும் நன்றாக இருக்கும் .இன்னும் பல முக்கிய கேள்விகளை முன்வைக்கலாம் . இந்த பேட்டி இந்திய அளவில் பலரை சென்றடையும் என்றாலும் , அதைவிடவும் தமிழகத்தில் இது முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய பேட்டி .
India Today is a Miracle…But That Miracle is Under Threat—Tamil Nadu Finance Minister P Thiaga Rajan
Khelraja delivers excellent digital entertainment with strong stability, enjoyable experiences, and user-friendly design. People like how easy it feels to use the platform while still enjoying engaging features. Everything is built to create smooth, exciting, and satisfying gaming sessions. Using the real money game app provides a reliable way to enjoy entertainment with confidence, comfort, and consistent quality.
ReplyDelete