Friday, October 10, 2014

ஜமாலன் - ‘மேலும்’ விருது அழைப்பிதழ்

'அன்புள்ள ஜமாலன்,   மேலும்  மேலும் விருதுகள் நீங்கள் பெற என் பிரார்த்தனைகள் (’துஆ’ என்று தமிழில் சொல்வார்கள்!) . இன்னும் துபாயில்தான் இருக்கிறேன். ஓரிரு மாதங்களில் ஊர் வரலாம். எதற்கும் அழைப்பிதழ் அனுப்பிவையுங்கள்' என்று எழுதியதற்கு ஜமாலன் பதில் எழுதினார் இப்படி :

அன்புள்ள ஆபிதின்

நன்றி. கண்டிப்பாக உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்புகிறேன். உங்கள் பிரபலமான தளத்தில் வெளியிட்டு கொஞ்சம் இலக்கிய தும்பிகளை கூட்டத்துக்கு அனுப்புங்கள். பிரியாணி தரமுடியாது. வந்தால் காதில் ரத்தம் வராமல் பஞ்சு தரப்படும். உங்கள் துவா (அரபியில் “பிரார்த்தனை”) அல்லாஹ் (அரபியில் இறைவன்) ”ஹபுலாகிவிட்டது (இதுவும் அரபியில் ஏற்கப்பட்டது என்று பொருள்).
***

வரும் ஞாயிறன்று சென்னையில் விழா நடக்கிறது. தமிழவன், நாகார்ஜூனன் இன்னும் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். அதில் பலரும் தங்கள் கருத்துக்களை கலந்துரையாட உள்ளனர். அழைப்பிதழ் இங்கே. காதுள்ளவர்கள் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்!
*

1 comment:

  1. என்னைப் போன்று, ஆபிதீனைப் போன்றவர்களுக்கு தாயகத்தில் நடக்கும் பல நிகழ்வுகள் சூழல் காரணமாகத் தவிக்கப்படுகின்றன. அதில் நிறய வருத்தமே உள்ளன. எங்களைப் போன்றோர்கள் தாயகத்திலும் அஜ்னபி, இங்கும் அஜ்னபியாக இருக்கிறோம். ஏன் வாழ்வே அஜ்னபி என்றுகூட சொல்லலாம். என்றாலும் இந்த நல்லவேளையில் எங்களால் வாழ்த்தாமல் இருக்க முடியாது. முசாஃபிர்களுடைய வாழ்த்தும் பிரார்த்தனையும் நிச்சியம் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் மேலும் சிறப்புற எங்களின் துஆ என்றும் உங்களுக்காகவே............

    ReplyDelete