முதல் பகுதி : http://abedheen.blogspot.com/2013/12/blog-post_12.html
இரண்டாம் பகுதி : http://abedheen.blogspot.ae/2014/01/2.html
இரண்டாம் பகுதி : http://abedheen.blogspot.ae/2014/01/2.html
***
அருட்கொடையாளர்கள் இன்னும் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் வெளிக்கொணர்ந்தபின் இதை எழுதலாமென்றால் எனக்கு வயது போதாமல் போய்விடும். எனவே அவர்களுக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு இதில் கை வைத்தேன். ஆம் கடந்த 22-7-2013 அன்று 'பிஸ்மி' சொல்லி பிள்ளையார் சுழி போடப்பட்டது. எழுதும்போது இடையில் ஒரு அலுப்பு, ஒரு சலிப்பு... ஏன் எழுதவேண்டும்? எதற்காக எழுதவேண்டும்? யாருக்காக எழுதவேண்டும்? இதில் என்ன நன்மை? எனக்கா? சமுதாயத்துக்கா? இல்லை படிப்பவர்களுக்கா? இப்படி பல கேள்விகள் எனக்குள்ளேயே.... இது ஒருபக்கம் என்றால் போதுமானத் தகவல் கிடைக்காதது வேறொரு பக்கம். இணையத்தில் எவ்வளவுதான் தேடினாலும் ஒரே மாதிரியான தகவல் குறுகிய அளவில் கிடைத்தனவே ஒழிய விரிவான செய்தி கிடைக்கவில்லை. ஒன்றிரண்டு தளத்தில் தகவல் மிகைப்படுத்தப் பட்டது போலும், பொருத்தமற்றது போலும் இருந்தது. இதற்கிடையில் ஷார்ஜாவில் நடந்த புத்தகக் காட்சியில் அலைந்து அலைந்து (நாயலைச்சல் அலைஞ்சு) கால் வலி கண்டதுதுதான் மிச்சம் மருந்துக்குக்கூட ஒரு ஆங்கில புத்தகம் கிடைக்கவில்லை. பாக்தாதின் வரலாறாவது கிடைக்குமா என்று தேடிப்பார்த்தால் புஷ் மகாராஜா பாக்தாதில் நடத்தியத் திருவிளையாடல்தான் கிடைத்தது. எதோ ஏற்கனவே ஒரு புத்தகக் கடையில் வாங்கிய "How Greek Science Passed to the Arabs" என்ற புத்தகம் பெரிதும் உதவியது. இதுவும் The Encyclopaedia of Britannica Ultimate Reference Suit ல் கிடைத்த செய்திகளையும் மற்றும் இணையத்தில் நோண்டி எடுத்த செய்திகளையும் ஆதாரமாக வைத்து இதனை இன்று 24-1-2014 அன்று எழுதிமுடித்தேன். - ஹமீது ஜாஃபர்
***
பாக்தாதில் தோன்றிய அராபிய அறிவின் எழுச்சியும் வீழ்ச்சியும்
The Raise and Fall of Arabian Wisdom in Baghdad.
பாகம் - 3
ஒற்றுமையை வலியுறுத்துவதுதான் இஸ்லாத்தின் முக்கிய குறிக்கோள். ஆனால் அந்த குறிக்கோளை நிலைநாட்ட முடியாமல் இன்றுவரை திணறிக்கொண்டிருக்கிறது. இது தீருமா என்றால் ஒருகாலும் தீராது என்ற விடையே கிடைக்கிறது. சிறு சிறு குழுக்களாக சிதறிக் கிடந்த அரபு மக்களை ஒன்று திரட்டி ஒரு குடையின் கீழ் நிற்கவைத்து ஏகத்துவத்தைப் புகட்டிய பெருமானார் (சல்) அவர்களுக்குப் பிறகு நீண்ட நாட்கள் அது நிலைத்து நிற்கவில்லை. அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்களை தவிர மற்ற மூன்று கலிஃபாக்களும் இயற்கையான மரணத்தை எய்தவில்லை. நான்காம் கலிஃபா அலி (ரலி) அவர்கள் காலத்தில் சலசலப்பு அதிகமனது. அது படிப்படியாக வலுவடைந்து கர்பலா யுத்தத்தில் வெடித்து சிதறியது. ஃபாத்திமியா பிரிவாக தோன்றி ஷியாவாக உருவெடுத்து பின் ஸுன்னி ஷியா என இரு பெரும் பிரிவுகளாயின. அவ்விரு பிரிவுகளுக்கிடையே இன்று வரை ஒற்றுமை என்பது துளி அளவும் இல்லாமல் இரத்த ஆறுகள் ஓடிக்கொண்டிருப்பதை அவரவர்கள் உணராமலிருப்பது வேதனை. முஸ்லிம் நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப் போர்களுக்கு இவர்களின் ஆதிக்க சக்தியே தலையாயக் காரணம் என்பதும் ஓர் உண்மை.
ஒன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி பதிமூன்றாம் நூற்றாண்டு வரை அறிவின் வளர்ச்சி, பல கண்டுபிடிப்புகள், பல ஆய்வுகள், பல மொழியாக்கங்கள் என ஒரு துறையில் நில்லாமல் பல்வேறு துறைகளில் தன் ஆதிக்கத்தைச் செலுத்தி உலகுக்கு அழிவில்லா பொக்கிஷத்தை வாரி இறைத்துக்கொண்டிருந்தது மத்தியக் கிழக்கு; குறிப்பாக பாக்தாத்.
எவை வெளிப்படுகின்றனவோ அவை மறைவது உலக நியதி போலும். மத்திய கிழக்கில் அறிவின் வளர்ச்சி நடந்தேறிக்கொண்டிருந்தபோது மங்கோலியாவின் மலைப் பகுதி ஒன்றில் ஒரு சிறிய நாடோடிக் குழுவின் தலைவரு(கான்)க்கு. கிபி 1162 வாக்கில் கையில் சிறிய ரத்தக்கட்டியைப் பிடித்தவாறு ஒரு 'தெமுஜின் போர்சிகின்' என்ற குழந்தை பிறந்தது. இளம் வயதில் தந்தையை இழந்த தெமுஜின் இருபதாவது வயதிலேயே சிதறிக்கிடந்த பல இனங்களை ஒன்றுசேர்த்து மிகப்பெரிய படையை உருவாக்கி மங்கோலியப் பேரரசை உருவக்கினான். மூர்க்கத்தனமும் போர்க்குணமும் கொண்ட தெமுஜின் தன் பெயரை 'செங்கிஸ்கான்' (World Conqueror) என மாற்றி தனக்குத்தானே பெயர் சூட்டிக்கொண்டான். 1219ல்
700,000 பேர் அடங்கிய ராணுவத்தைக்கொண்டு புக்கரா, சமர்கந்த் (உஸ்பெகிஸ்தான்), பல்க் (ஆப்கானிஸ்தான்), மெர்வ் (துர்க்மெனிஸ்தான்), நிஷப்பூர்(ஈரான்) ஆகிய பகுதிகளைக் கைப்பற்றி எண்ணிலடங்கா உயிரிங்களை அழித்தான் (where he slaughtered every living thing). 1127ல் செங்கிஸ்கான் இறப்பதற்கு முன் மேற்கு அஜர்பைஜான் வரை பிடித்தெடுத்த பகுதிகளை கொள்ளையடித்து நகரங்களையும் எரித்துவிட்டதாக வரலாறு கூறுகிறது. ஹெரத் நகரை முற்றுகையிட்டு 1,600,000 பேர்களை கொன்றுகுவித்ததாக வரலாற்றுப் பதிவு (when he besieged the city of Herat, in present-day Afghanistan, he killed over 1,600,000 people). செங்கிஸ்கான், இஸ்லாமிய நாடுகளை ஒட்டியுள்ள நாடுகளை சூரையாடினாலும் இஸ்லாமிய நாட்டில் ஊடுருவவில்லை. ஆனால் முஸ்லிம் நாடுகள் மீது ஒரு சீற்றம் இருந்துக்கொண்டே இருந்தது. செங்கிஸ்கானுக்குப் பிறகு பதிவியேற்ற மொங்கே தன் சகோதரனும் செங்கிஸ்கானின் பேரனுமான ஹுலகு கானை (Hulagu Khan) (1217 -65) ஈராக், சிரியா, எகிப்து மீது படை எடுக்க உத்தரவிட்டான்.
ஊடுருவல்
1221ல் ஜலாலுதீன் தலைமையிலான படை ஆப்கானிஸ்தானிலிள்ள பர்வான் என்ற இடத்தில் மங்கோலியர்களை வெற்றிகண்டது. அவ்வெற்றி இஸ்லாமியர்களுக்கு தற்காலிக ஊக்கத்தை அளித்ததே அல்லாமல் அது நீடிக்கவில்லை. தோல்வியுற்ற மங்கோலியர்கள் பின்னும் படைபலத்தை அதிகரித்து அவ்வருடமே ஜலாலுதீன் படைகளை சின்னாபின்னமாக்கினான். அதை தொடர்ந்து 1237ல் இஸ்ஃபஹான் (ஈரான்) நகரம் வீழ்ந்தது. வரலாற்று புகழ்வாய்ந்த நகரங்களை தரைமட்டமாக்கியபடி ஹுலகு கான் தலமையில் இரண்டு லட்சம் (முரடர்) படையுடன் (200,000 Tartars) பக்தாதை நோக்கி முன்னேறத் தொடங்கினர். (150,000 என்கின்றனர் சில வரலாற்றாசிரியர்கள்.)
ஹுலகு கானுடன் பயணம் செய்த பாரசீக வரலாற்றாசிரியர் ஜுவைனி எழுதுகிறார், 'மங்கோலியர்கள் சிறந்த குதிரைவீரர்கள், பழங்குடியினராக இருந்தமையால் மாயவித்தை கற்றுவைத்திருந்தனர். அவர்கள் எங்கு ஆக்ரமித்தாலும் அங்கு கொள்ளை, கொலைசெய்துவிட்டு அந்நகரையே எரித்து நாசம் செய்துவிட்டு நீங்குவார்கள். அவர்களிடம் கனரக ஆயுதங்களும், சீனதேச வில் வீரர்களும் இருந்தனர்.'
சுகமான வாழ்க்கையையே மனித மனம் விரும்பும், அதிலும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை சொல்லவே வேண்டாம். மதுவிலும் மங்கையிலும் புரண்ட மன்னர்கள் எத்தனை எத்தனையோ, நாட்டை பறிகொடுத்தவர்களும் விரட்டப்பட்டவர்களும், ஓடி ஒளிந்தவர்களும் எத்தனையோ. இது ஒருபக்கம் என்றால் பொழுதுபோக்கிற்கே முக்கியத்துவம் கொடுத்த மன்னர்களும் உண்டு. அந்தவகையில் கலிஃபா முஃதஸிம் வேட்டையாடுவதிலும், இசைக் கேட்பதிலும் ஆர்வத்தைக் காட்டிவந்தார். நாட்டைன் நலனில் அக்கரை செலுத்தவில்லை. மோசூலில் கவர்னராக இருந்த பதுருத்தீன் லுலுவிற்கு இருமுறை வேண்டுகோள் அனுப்பியிருந்தார், நல்ல இசை கலைஞர்களையும் அத்துடன் சில இசைக் கருவிகளையும் அனுப்பிவைக்குமாறு.
எட்டப்பன்கள்
13ம் நூற்றாண்டில் பாக்தாத் மட்டுமல்ல பல இஸ்லாமிய நாடுகள் ஒற்றுமை இல்லாமலிருந்தன. வலிமை உள்ளவர்கள் பிரிவுப் பிரிவாக ஆட்சி செய்துக்கொண்டிருந்தனர். இதல்லாமல் ஷியா ஸுன்னிகளுக்கிடையே வலுத்துவந்த ஒற்றுமையின்மை. இவைகள் மங்கோலியர்களின் ஆக்ரமிப்புக்கு வழிவகுத்தன. அப்பாஸிய கலிஃபாக்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஷியா பிரிவினர் கணிசமாகவே இருந்தனர். தவிர அரசவைப் பொறுப்புக்களில் குறிப்பாக மந்திரிப் பதவிகளிலும் ஷியா பிரிவினர் இருந்தனர். கலிஃபாக்களைப் பொருத்தவரை ஷியா ஸுன்னி என பாகுபாடு காட்டவில்லை. எப்படி ஏற்றமிகு இருந்தாலும் சில புல்லுருவிகள் இருக்கத்தானே செய்வர். ஆம் அங்கும் கலிஃபாவைப் பிடிக்காத,
அப்பாஸிய வம்சத்தைப் பிடிக்காத சில எட்டப்பன்கள் இருந்தனர். இதில் மிக முக்கியமானவர் கலிஃபாவின் மந்திரியாகவும், தளபதியாகவும் இருந்தவர் இப்னு அல் அல்காமி. ஷியா பிரிவை சேர்ந்த இவர் மங்கோலியர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதாக வாக்களித்தார். வேண்டா விருந்தாளிகளுக்கு பல ஓலைகள் அனுப்பினார். தங்கள் நாட்டினுள் ஊடுருவ அழைப்பு விடுத்தார், நாட்டின் நிலையையும் வளத்தையும், கலிஃபாவின் ராணுவத்தின் பலத்தையும் பலவீனத்தையும் தெரிவித்தார். படை எடுப்புக்கு முன்னதாகவே ராணுவ செலவைக் குறைப்பதாக காரணம் காட்டி தலை சிறந்த ராணுவ வீரர்களை வீட்டுக்கு அனுப்பினார். கலிஃபாவுக்கு விசுவாசமான ராணுவ அதிகாரிகளையும் வீரர்களையும் இடமாற்றம் செய்தார். போதிய பயிற்சி இல்லாத வீரர்களை முன்னிலைப் படுத்துவதற்காகத் தக்கவைத்துக்கொண்டார்.
The Mongol invasion began like the American invasion: with a disgruntled Shi'ite upstart aspiring to greatness. The Ahmad Chalabi of the 13th century was a character called Ibn Al Alqami was a minister in the court of the Caliph al-Musta'sim. Like Chalabi, al-'Alqami had desires of leadership of the land and, like Chalabi, he was not above soliciting the assistance of foreign powers to help – even if that assistance would come at great cost to his people or his nation. America was not a superpower in al-Alqami's time so he turned his attentions to the Mongols. Al-'Alqami wrote a number of letters to the leader of the Mongols, Hulagu Khan, inviting him to invade the land, promising' his support and offering "intelligence" on the Caliph's armies, their strengths and weaknesses, and the overall lay of the land. = Source: http://www.antiwar.com/orig/butler.php?articleid=2533
பாக்தாதின் விதி
பாக்தாதின் புறத்தே பாளையமிட்ட ஹுலகு கான் மங்கோலிய வழக்கப்படி, தனக்கு கீழ்படியும்படியும் இல்லையானால் என் கோபம் பாக்தாதை அழித்துவிடும், நான் உன்னை கைது செய்வேன் நீ பூமியில் எங்கிருந்தாலும், சொர்க்கத்தில் இருந்தாலும் இல்லை சுழலும் கோளத்தில் இருந்தாலும் உன்னை கொண்டுவருவேன், சீறும் சிங்கத்தைப் போல் உன் மீது பாய்வேன், உன் ராஜ்யத்தில் யாரையுமே உயிருடன் இருக்க விடமாட்டேன்; உன்னை, உன் நாட்டை கொளுத்துவேன். நீயும் உன் மரியாதைக்குரிய குடும்பமும் உயிருடன் இருக்கவேண்டுமென்றால் நான் சொல்வதை புத்திசாலித்தனமாக செவிசாய்த்து கவனம் செய். இல்லையானால் கடவுள் என்ன நாடியிருக்கிறான் என்பதைப் பார் என கலிஃபாவுக்கு செய்தி அனுப்பினான்.
தன் படையின் மீதும் படைத் தளபதிமீதும் அளப்பரிய நம்பிக்கை வைத்திருந்த கலிஃபா மிரட்டலுக்குப் பணியவில்லை. மாறாக நீ எங்கள் மீது தாக்குதல் தொடுத்தால் முஸ்லிம் உலகமே உன்னை எதிர்த்து நிற்கும் என்று பதில்
அனுப்பினார். தனது தளபதி இப்னு அல் அல்காமியின் சூழ்ச்சி அறியாமல் தளபதி சொல்படி வியூகம் வகுத்தார். தன் கொற்றத்தின் கீழ் வாழ்ந்த கிருஸ்துவர்களும், ஷியாக்களும் தனக்கு எதிராகத் திரும்புவார்கள் என கனவிலும் நினைத்துப் பாராத கலிஃபா தன் படைகளைத் திரட்டினார். டைக்ரீஸ் நதியை பாதுகாப்பு கவசமாக பயன்படுத்த இரு கரைகளையும் படைகளை நிறுத்தினார். 1258 ஜனவரி 11ம் நாள் பாக்தாதின் எல்லையை மங்கோலியர் அடைந்தனர். முதலில் 20,000 பேர் கொண்ட குதிரைப் படையை கலிஃபா அனுப்பினார். போர் உக்கிரமமாக நடந்தாலும் இறுதியில் கலிஃபாவின் படைத் தோல்வியை அடைந்தது. மங்கோலியப் படை டைக்ரீஸைக் கைப்பற்றி கலிஃபாவின் துருப்புக்கள் தப்பிக்க முடியாதபடி
செய்தனர்.
ஜனவரி 29ம் நாள் பாக்தாதைக் கைப்பற்றத் தொடங்கினர். நகரை சுற்றியும் கூரானப் பொருட்களால் வேலி அமைத்து அகழியும் வெட்டினர். கோட்டை மதில்களை உடைக்க கவன் மற்றும் வெடிப்பொருட்கள் அடங்கிய இயந்திரங்களை உபயோகித்தனர். பிப்ரவரி 5ம் தேதி பாக்தாதின் பெரும்பகுதி வீழ்ந்தது. 1,50,000 துருப்புக்கள் கொண்ட ஹுலகு கான் படையுடன் கலிஃபாவின் படைகளால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை. நிலமை மோசமாகிப்போவதைக் கண்ட கலிஃபா ஒன்றும் செய்ய இயலாது திகைத்து நின்றார். சமாதானப் பேச்சு இனி பயன்படாது என்று தெரிந்தும் சமாதானத் தூது அனுப்பினார். அதில் "தங்களை இந்நாட்டின் சுல்தானாக பிரகடனம் செய்கிறேன், வெள்ளிக்கிழமை குத்துபா பேருரையில் தங்கள் பெயரை சேர்த்து பிரசங்கம் செய்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். நினைத்தபடியே ஹுலகுகான் ஏற்கவில்லை.
அல் அல்காமியின் அடுத்த சூழ்ச்சியும் கலிஃபாவின் முடிவும்
10-2-1258 ல் முற்றிலுமாக பாக்தாத் வீழ்ந்தபின் ஹுலகு கான் உள்ளே நுழையவில்லை. தன்னுடன் அழைத்து வந்த நஸிருதீன் தூஸியை, அல்காமியை சந்தித்து வரும்படி தூது அனுப்பினான். இருவருடைய சந்திப்புக்குப் பின் அல்காமியின் புத்தி இன்னும் கூறாக சதி செய்தது. அது ஹுலகுவை சந்தித்து பணிந்துப்போவது. நிலமை கைவிட்டுப் போனபின் வேறு வழி தெரியாது அல்காமியின் ஆலோசனைப்படி கலிஃபா அறிஞர்கள், சட்ட ஆலோசகர்கள், தளபதிகள் உட்பட தனது பரிவாரங்களுடன் ஹுலகுகானை அவனது இருப்பிடத்தில் சந்திக்கச் சென்றார். கூட வந்தவர்கள் எல்லோரையும் புறத்தே நிறுத்திவிட்டு கலிஃபா, அல்காமி உட்பட 17 பேர்களை மட்டுமே தன்னுடன் பேச அனுமதி அளித்தான். பொக்கிஷங்களை ஒப்படைப்பதாக பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டு அல்காமியுடன் நஸிருதீன் தூஸி பின் தொடர கலிஃபா தன் அரண்மனைக்குத் திரும்பினார். ஒப்புதல்படி தங்கம், வைரங்கள் நிறைந்த பொக்கிஷங்களை ஒப்படைக்க மீண்டும் சென்ற கலிஃபாவை ஹுலகு கைது செய்தான். கலிஃபாவை வாளால் கொல்லவேண்டும் என்பது அல்காமியின் அவா. (As soon as he returned, the order was given to kill him, and it is said the one who gave the suggestion was Ibn Al-'Alqami himself along with Al-Toosi.) ஆனால் மங்கோலிய வழக்கம் அரச இரத்தம் (பூமியில்) சிந்தக்கூடாது. எனவே கைது செய்த உடனே அவரை ஒரு கம்பளத்தில் சுற்றி குதிரைகளைக்கொண்டு மிதிக்கச் செய்து கொன்றான். (Al-Musta’sim was rolled in a carpet and trampled to death by horses — the Mongols’ own method for putting kings to death without shedding royal blood.)
ஒரு மில்லியன் ஜனத்தொகையும் 60,000 துருப்புக்களையும் கொண்ட பாக்தாத் இரண்டு வாரத்துக்குமேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 10ம் தேதி சரணடைந்தாலும் கலிஃபா கொல்லப்பட்டபின் 13ம் தேதி பாக்தாதுக்குள் புகுந்த முரட்டுப் படையினர்(Tartars) ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. முதியோர், சிறுவர், குழந்தை என எவரையும் விட்டு வைக்காமல் கண்ணில் கண்டவர் அனைவரையும் வெட்டி சாய்த்தனர். முதல் நாளே பல்லாயிரம்பேர் கொலை செய்யப்பட்டனர்.
தப்பிக்க முயன்ற பொதுமக்களை இடைமறித்து வெட்டிக்கொன்றனர். சுமார் 90,000 பேர்களை வெட்டிக் கொன்றதாக 'மார்டின் சிக்கர்' குறிப்பிடுகிறார்.சில லட்சங்கள் இருக்கலாம் என்று வஸ்ஸாஃப் சொல்கிறார். இரண்டு லட்சத்திலிருந்து ஒரு மில்லியன் வரை இருக்கலாம் என்று இயான் ஃப்ரேஸியர் குறிப்பிடுகிறார்.
ஒருவாரம் தொடர்ந்து நடந்த மிருகத்தனமான ஆக்கிரமிப்பில் வீடுகள், கட்டிடங்கள், பள்ளிவாசல்கள், மருத்துவமனைகள், பைத் அல் ஹிக்மா உட்பட அனேக நூலகங்கள், அரண்மனைகள் அனைத்தும் தீக்கரையாயின. நூலகங்களில் இருந்த விலை மதிப்பிடமுடியாத அனைத்து நூல்களையும் டைக்ரீஸ் நதியில் தூக்கி எறிந்தனர். நூல்களில் எழுதப்பட்ட கருப்பு மை கரைந்து டைக்ரீஸ் நதியே கருப்பு நிறமாக மாறியது. பாக்தாத் நகரில் எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்கள் வீதிகளில் ரத்த ஆறு பெறுக்கெடுத்து ஓடியது, மங்கோலிய குதிரைகள் அவ்வாற்றில் நீந்தின என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள். (the Tigris river an red with the blood of the dead then black from the ink run of the manuscripts thrown into the river)
இஸ்லாமிய அறிஞரான இப்னு கஸிர் தன்னுடைய 'பிதாயா வ நிஹாயா'வில் இவ்வாறு குறிப்பிடுகிறார், "After the Khaleefah was killed, they went and stormed through the country, killing everyone they were able to from men, women, and children, old and young, sick and healthy. Many people hid inside wells and gardens, hiding for days so as not to be found, or ran to the hills and mountains. The Tatar continued their rampage, killing the people even on the roofs of their homes and inside the Masjid, until the streets ran of blood like rainwater in a valley. No one was safe from them, except the Jews, Christians and those that took refuge in the home of Ibn Al-'Alqami the Shee'ah, the same one who set this trap for the Muslims. The killing continued until it was said that the number of dead reached one million eight thousand bodies."
In the 1990s, the land and its people were attacked again. They attacked hospitals and pharmacies, water reservoirs and food warehouses, factories and power stations, schools and orphanages, homes and bazaars. They also imposed a blockade on the country that denied food to the hungry. Source: http://www.albalagh.net/food_for_thought/baghdad.shtml
அறிஞர்கள், மார்க்க விர்ப்பண்ணர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் என பாரபட்சமின்றி கொன்று குவித்து, மண்டை ஓடுகளைக்கொண்டு ஹுலகுகான் பிரமிட் அமைத்ததாக வரலாறு செப்புகிறது. 13th century when the hordes of Hulagu Khan grandson of Genghis Khan, sacked Iraq. After massacring entire towns and villages,they would assemble huge pyramids of human skulls as a reminder and warning that the Mongols were passing through. One can presume that similar sentiments – a need to send a "message" to would-be "insurgents" – underpin American atrocities in the region today. Source: http://www.antiwar.com/orig/butler.php?articleid=2533
டைக்ரீஸ் யூப்ரடீஸ் நதிகளில் சில நூற்றாண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட அணை உடைக்கப்பட்டது. அங்கு நடந்த விவசாய முறைக்கு அமைந்த பாசனத்திட்டம் உலகம் வியக்கும் வன்னம் மிகு நுட்பமான முறையில்
அமைக்கப்பட்டிருந்ததை அடியோடு அழித்தனர். சுருக்கமாக சொல்லப்போனால் பாக்தாதில் மனித நடமாட்டமே இல்லை, அது மனிதன் வாழமுடியாத நகரமாக (Ghost city) வெறிச்சோடிப்போனது. ஏறக்குறைய பத்துலட்சத்துக்கு மேற்பட்டோர் கொள்ளப்பட்டதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். (By some estimates, the number of dead exceeded 1 million.) இத்துடன் நின்றுவிடவில்லை, எல்லாம் முடிந்தபிறகு சிகரம் வைத்தார்போல் முஸ்லிம்களின் கபறுகளைத் தோண்டி உடல்களை எடுத்தனர், கலிஃபா ஹாரூன் ரஷீதின் அடக்கஸ்தலத்தையும் விட்டுவைக்கவில்லை The Mongols also uprooted many Muslim graves in their wake, including that of Harun al-Rashid, the 8th century Abbasid caliph who was featured in The Thousand and One Nights fables. Source: http://www.ucalgary.ca/applied_history/tutor/islam/mongols/ilkhanate.html
அரண்மனைப் பெண்கள் வீதிகளில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர். கலிஃபாவின் குடும்பத்தில் அனைவருமே கொல்லப்பட்டனர், கடைசி மகன் மற்றும் மகளைத் தவிர. மகளை ஹுலகு தன் அந்தப்புரத்து அடிமையாக ஆக்கிக்கொண்டான். மகனை மங்கோலியாவில் சிறை வைக்கப்பட்டதாகவும் பின் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல். அவர் அங்கு மணம்புரிந்து குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தாரே ஒழிய ஒன்றும் செய்யவில்லை என மங்கோலிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவதாக விக்கிப்பிடியா...
உப்பு திண்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் என்பது முது மொழி. அரசரை, நாட்டைக் காட்டிக்கொடுத்து பல்லாயிர உயிர்களைப் பலியாக்கியதன் பலனாக இப்னு அல் அல்காமிக்கு ஹுலகுகான் கொடுத்தப் பரிசு, ராஜ துரோகம் செய்த குற்றத்துக்காக மரண தண்டனை. (they hung him from his legs and let everyone cut his body into pieces)
அறிவின் மீளா முடிவு
கலிஃபா முஃதசிம்பில்லாவுடன் ஐநூறு ஆண்டுகால பாரிய அப்பாஸிய ஆட்சி முடிவுற்றது. கல்வி வாசனையே இல்லாத முட்டாள் முரடர்கள் படையைக்கொண்ட ஹுலகுகானின் மிருகத்தைவிட கேவலமான ஆக்ரமிப்பால் பல்வேறு அறிஞர்களின் மகத்துவமிக்க உழைப்பால் ஐந்து நூற்றாண்டுகளாக சேகரிக்கப்பட்ட விலைமதிப்பற்ற எண்ணற்ற நூல்கள் ஒரே நாளில் நீருக்கும் நெருப்புக்கும் இரையாயின. அவற்றிலிருந்து தப்பியவற்றிலிருந்து கிடைக்கப்பெற்ற அறிவுகளைத் தவிர மறைந்துபோன அறிவுகள் ஏராளம். அவைகள் இருந்திருந்தால் இன்றைய நவீன உலகிற்கு பெரும் வரப்பிரசாதமாக இருந்திருக்கும் என்பது திண்ணம். The world will never truly know the extent of what knowledge was lost forever when those books were thrown into the river / burned. அன்று - 13ம் நூற்றாண்டில் மறைந்துபோன அறிவிலிருந்து இன்று வரை இஸ்லாமிய உலகம் மீளவும் இல்லை இனி மீளப்போவதும் இல்லை.
***
Sources:
"How Greek Science Passed to the Arabs." By De Lacy O'Leary
The Encyclopaedia of Britannica Ultimate Reference Suit
http://www.history-science-technology.com/articles/articles%2012.htm
http://islamiccoins.ancients.info/umayyads/umayyadhistory.htm
http://www.islamicity.com/education/ihame/?Destination=/education/ihame/4.asp&AspxAutoDetectCookieSupport=1
http://muslimheritage.com/topics/default.cfm?ArticleID=220
http://www.myiwc.com/forums/showthread.php?t=3025
http://faithforum.wordpress.com/islam-2/knowledge-and-learning/islamic-education-system/
http://metaexistence.org/educationalinst.htm
http://en.wikipedia.org/wiki/Umayyad_Caliphate
http://en.wikipedia.org/wiki/Umar_II
http://www.renaissance.com.pk/novletfor95.html
http://en.wikipedia.org/wiki/List_of_Caliphs
http://english.islammessage.com/articledetails.aspx?articleId=1162 http://www.religionfacts.com/islam/history/abbasid.htm
http://historymedren.about.com/library/text/bltxtiraq6.htm
http://journal-archieves18.webs.com/829-835.pdf (early education)
http://www.infoplease.com/encyclopedia/people/marwan-ii.html
http://en.wikipedia.org/wiki/House_of_Wisdom
http://knowingthetruth.wordpress.com/2007/12/11/baghdad-bayt-al-hikmah/
http://www.islamicity.com/mosque/ihame/sec12.htm
http://muslimheritage.com/topics/default.cfm?ArticleID=805
http://global.britannica.com/EBchecked/topic/416541/Nizam-al-Mulk
http://www.antiwar.com/orig/butler.php?articleid=2533 http://www.albalagh.net/food_for_thought/baghdad.shtml
http://arabic-media.com/mongol.htm
http://historymedren.about.com/library/text/bltxtiraq7.htm
http://www.uwgb.edu/dutchs/westtech/xmongol.htm
http://www.ucalgary.ca/applied_history/tutor/islam/mongols/ilkhanate.html
http://www.youtube.com/watch?v=jCUN5JL5Mmo http://www.dailymail.co.uk/sciencetech/article-1350272/Genghis-Khan-killed-people-forests-grew-carbon-levels-dropped.html
http://lostislamichistory.com/mongols/
http://en.wikipedia.org/wiki/Siege_of_Baghdad_(1258)
http://www.twcenter.net/forums/showthread.php?242170-The-Battle-of-Baghdad-1258-The-Mongol-Invasions
http://historyofislam.com/contents/the-post-mongol-period/the-fall-of-baghdad/
http://www.executedtoday.com/2009/02/20/1258-al-mustasim-the-last-abbasid-caliph/
http://www.ummah.com/forum/showthread.php?323600-Ibn-Al-Alqami-The-Shia-who-destroyed-Baghdad
***
நன்றி : ஹமீது ஜாஃபர் (http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com
/The world will never truly know the extent of what knowledge was lost forever when those books were thrown into the river / burned. அன்று - 13ம் நூற்றாண்டில் மறைந்துபோன அறிவிலிருந்து இன்று வரை இஸ்லாமிய உலகம் மீளவும் இல்லை இனி மீளப்போவதும் இல்லை./ நானா கதையின் twist ஏ இப்பத் தான் ஆரம்பிக்கிறது. இடைவேளைக்கு பிறகு தொடரவேண்டும். கால தாமதமானாலும் பரவாயில்லை.
ReplyDeleteநானா 'கதை' சொல்லப் போவதும் இல்லை!
Deleteநூருல் அமீன். இது கதையல்ல நடந்து முடிந்த வரலாற்று துக்கம். இஸ்லாத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு. அது மட்டுமல்ல இஸ்லாமிய அறிவுக்கு முத்திரை வைக்கப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம்.
Deleteஇனி எழுதவேண்டுமானால் இன்றைய அரபியர்களின் அசிங்கமான அறிவியலைத்தான் சொல்லவேண்டும். அரபு நாட்டில் வாழும் நாம்தான் தினம்தோரும் பார்க்கிறோமே..! இது தேவையா..?