சூப்பர் பேத்தி. அவள் இன்று செய்த செம வேலை போல நானும் தாஜின் அத்தனை கவிதைகளையும் செய்யலாம் என்றுதான் நினைக்கிறேன். முடியலையே.. சமயத்துல மனுசன் நல்லாவும் ஃபேஸ்புக்குல உண்மையை எழுதிடுறாரு...!.. - ஆபிதீன்
***
விமோசனம் - தாஜ்
மறைந்த
மூத்த படைப்பாளி ஒருவரின்
ஆக்கத்தை
வாசித்து சிலாகித்து
விசேசம் பொருந்தியதென
எத்தனைக் காலம்
பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்!
அந்த மக்கிய காலத்தை
கரையான் தின்னக் கூட
அனுமதித்ததில்லை நான்.
இன்றைக்கு
என் ரெண்டு வயது பேத்தி..
அந்தப் புத்தகத்தை
என் கண் முன்னாலேயே
எடுத்து போய்
வெளிச்சமற்ற
ஓர் மூலையில் உட்கார்ந்தபடி
பக்கம் பக்கமாய்
பிரித்துப் பார்த்து மழலையில்
புரிந்தும் புரியாமல் ஏதேதோ வாசிக்க
கண்டு சிரித்து
திரும்பிய நாழிகைக்கெல்லாம்
கிழித்தெறிந்து விட்டது.
எப்படிப் பார்த்தாலும்
இறந்த காலத்திற்கு
உரிய விமோசனம் தந்த
குழந்தை என்னைவிட
புத்திமான்!
***
நன்றி : பேத்திக்கு!
தாஜ்,
ReplyDeleteசொல்லுலாயிடு மலையாளப் படம் பார்த்தபிறகு உங்கள் கவிதையைப் படித்தேன். உள்ளம் நெகிழ்ந்துவிட்டது. ஆம் அப்படத்தின் கதையும் உங்கள் கவிதையும் ஒரே நேர்கோட்டில் செல்கிறது.
ஆம்! குழந்தைகளுக்கென்ன தெரியும் பழாப்போன பழமையின் அருமை....!
சந்தோஷமாக இருக்கிறது நாநா...
ReplyDeleteஅவளுக்காக
துவா செய்யுங்கள்.