Thursday, October 17, 2019

முத்துக்கள் பத்து (பொன்மொழிகள்)

தம்பி சகீர் ஹூசைன் தொகுத்துக்கொடுத்த பொன்மொழிகள் இவை. எழுதிக் கொடுத்து ஓரிரண்டு வருடங்கள் இருக்கும். என் சோம்பலால் இன்றுதான் கிடைத்தது. பகிர்கிறேன். - AB

*

1. எவன் முட்படுக்கையை மலர் படுக்கையாய் கொள்கிறானோ அவனே பார்வையற்றவர்களுக்குப் பார்க்கும் திறனை வழங்குகிறவன். - மௌலானா ரூமி (ரஹ்)

2. வெட்கம் வீதிக்குப் போனபின் திரையிட்டு என்ன பயன்? - இமாம் சாஅதி (ரஹ்)

3. ’என் தலைவனின் உலகம் ஒளிமயமானது! எங்கும் பேரொளி வீசிக்கொண்டிருக்கும். அந்த ஒளி தூயது, மகிழ்ச்சியளிப்பது’ என்று தமக்குள் (அறிவுடையோர்) சொல்லிக்கொள்வர். - மீர்ஸா காலிப்

4. உலகினை விரும்புபவன் ஆணும் பெண்ணுமல்லாத அலி ஆவான். மறு உலகில் சொர்க்கத்தை விரும்புபவன் பெண்ணாவான். ஆண்டவனையே விரும்புபவன் ஆணாவான். - அன்னை ராபியா பஸரி (ரஹ்)

5. காற்றடித்தால் வளர்வாள்; தண்ணீர் குடித்தால் சாவாள் - நெருப்பைப் பற்றி அமீர் குஸ்ரு (ரஹ்)

6. வாழ்க்கையில் இரண்டு முறை சோகம் நிகழலாம். a: விரும்பாதது நெருங்கி வரும்போது, b: விரும்பியது விலகிப் போகும்போது. - யாரோ

7.ஒன்றையொன்று நினைவில்கொண்டு உளதாயிருக்கிற இரண்டு ஒன்றுபடாமல் போய்விடுமா?  - மன்சூர் ஹல்லாஜ்

8. ரூமி கூறுவதாக எங்கள் ஹஜ்ரத் சொல்வார்கள் : உங்கள் கண்கள் மிகச்சிறியவை; ஆனால் மிகப் பெரியவைகளை அவைகள் பார்க்கின்றன.

9. எல்ல இடங்களிலும் எல்லாவற்றிலும் நல்லதைக் கண்டுபிடிப்பதற்கான மனநிலைதான் மன ஆரோக்கியத்திற்கான அளவீடு - ரால்ப் வால்டோ எமர்ஸன்

10. செயல்தான் வளமான பேச்சு - ஷேக்ஸ்பியர்
*




நன்றி : நாகூர் கவிஞர் சகீர் ஹூசைன்

தொடர்புடைய பதிவு :
இசை : உத்தமர் உஸ்மான் (ரலி) பொன்மொழிகள்

No comments:

Post a Comment