'நல்லதைப் படிப்போம், வருங்காலத்துக்கு நல்லதை விதைப்போம். விதை முயற்சியில் உங்கள் மனங்களில் விழுந்தால் மரமாவேன்; ஏற்க மறுத்தால் மீண்டும் விதையாவேன்.' என்று தன் சிறுகதைத் தொகுதியான 'வெள்ளைக் காகிதத்தில் ஒரு கரும்புள்ளி' முன்னுரையில் குறிப்பிடும் இளைஞர் லி. நௌஷாத்கானின் முப்பத்தெட்டாயிரத்து ஒன்னாவது சிறுகதை இது. ஆமாம், அவ்வளவு வேகத்தில் நிஜமாகவே எழுதுகிறார் (சினிமா ஆசை!). நாவல்கள் மட்டும் நானூத்தி இருபது எழுதியிருப்பதாகவும் இதுவரை நாற்பது மட்டுமே வெளியாகியிருப்பதாகவும் தன்னடக்கத்தோடு கூறும் இவர் ஒரு M.B.A பட்டதாரி. இலக்கியத்தில் முனைவர் பட்டம் வாங்கியவர் என்று இணையம் சொல்கிறது. 'வெறும் கதைசொல்லியாக மட்டுமல்லாமல் கதையின், கதாபாத்திரங்களின் அனைத்துத் தன்மைகளையும் அறிந்த அறிவு கொண்டவர் என்று 'உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத் தலைவரான' கவிஞர் வதிலைபிரபாவும் சொல்கிறார். கு.ப. ராஜகோபாலன், எம்.வி. வெங்கட்ராம் போன்ற மேதைகளின் எழுத்தைப் படித்து மேலும் உயர - அபுதாபியில் வாழும் - இந்தக் கும்பகோணம் இளைஞரை வாழ்த்துகிறேன்.
P.S. : இந்தக் கதையின் கடைசியில் வரும் பத்தி உடைகிறதே, ஏன் என்று கேட்டதற்கு அது கவிதைண்ணே என்றார் நௌஷாத். இருக்கலாம். அதைச் சேர்த்தோ நீக்கியோ படிக்கவேண்டியது வாசகர்கள் விருப்பம். நன்றி. - AB
*
P.S. : இந்தக் கதையின் கடைசியில் வரும் பத்தி உடைகிறதே, ஏன் என்று கேட்டதற்கு அது கவிதைண்ணே என்றார் நௌஷாத். இருக்கலாம். அதைச் சேர்த்தோ நீக்கியோ படிக்கவேண்டியது வாசகர்கள் விருப்பம். நன்றி. - AB
*
அறுந்த பட்டமும் அடிமை வாழ்க்கையும்
லி. நௌஷாத்கான்
உப்பிட்ட வரை உள்ளளவும் நினை ,அன்னமிட்ட கைகளை குறை கூறாதே ,திண்ண வீட்டுக்கு துரோகம் செய்யாதே என்று உணவை பற்றி பல பழமொழிகள் உள்ளது .எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் பசிக்கு அன்னமிட்ட கைகளைத் தான் குறை சொல்லக் கூடாது .அதே சமயத்தில் காசை வாங்கி கொண்டு ருசி இல்லாத தரம் குறைந்த உணவை தர கூடியவர்களை திட்டக் கூடாது ,குறை கூறக் கூடாது என்று எந்த சட்டமும் ,சாஸ்திரங்களும் சொல்ல வில்லை …..
சாப்பாடு சரி இல்லைன்னா
கடையை மாத்துன்னு நீங்க
சொல்லலாம் ,ஆனா அந்த
கடைய விட்டா வேறு
கதி இல்லைன்னா என்ன
பண்ண முடியும்?
அயல் நாட்டிற்கு பிழைக்க வந்து மனசால் செத்து போன ஒரு இளைஞனின் கதை…
வீட்டிற்கு வாசு ஒரே
பிள்ளை.அம்மா தனலட்சுமி
ஹவுஸ் ஒய்ப் ,அப்பா
செந்தில் நாதன் ஒரு
பெட்டிக்கடை வைத்து பிழைப்பு
நடத்துகிறார். பையனை
ஏதோ அவங்க சக்திக்கு முடிஞ்ச
வரை காலேஜ் வரைக்கும்
படிக்க வச்சாங்க
.அம்மாவுக்கு எழுத படிக்க
தெரியாது .அப்பா சீக்குல
படுத்ததாலே கடைய கவனிக்க
முடியல.குடும்ப தேவைக்காக
ஒருவர் குடும்பத்துக்காக சம்பாதிக்க
வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது …எத்தனை
காலத்துக்கு தான் குடும்பம்
கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்க முடியும் ..அதனால் வேறு
வழியில்லாமல் தனது ஒரே
மகன் வாசுவை பஞ்சம்
பிழைக்க அயல் நாட்டுக்கு
அனுப்பினார் …..
வாசுவின் குடும்பம் நடுத்தர
குடும்பம் என்றாலும் வாசு
செல்வந்தன் பிள்ளை போல்
வளர்க்கப் பட்டான் …தனி அறை ,இரண்டு பேன் ,தனி டிவி ,மியூசிக்
பிளேயர் ,ஐ பேட் ,செல் போன் ,ரீடிங் டேபிள் என்று
அனைத்து வசதிகளையும் அவர்
தந்தை செய்து கொடுத்திருந்தார். பெரும்பாலான வேலைகளை செந்தில்நாதனே
செய்து முடிப்பார் எல்லாரும் பேச்சுக்கு
தான் சொல்வார்கள் உன்னை
பாலூட்டி தேனூட்டி வளர்த்தேன்
என்று ,ஆனால் செந்தில்
நாதன் தன் மகனை
சீராட்டி ,பாராட்டி பாலூட்டி ,தேனூட்டி
வளர்த்தார் .அவன் மீது
ஒரு தூசு படாமல்
கண்ணின் இமை போல்
பாதுகாத்து பாசத்துடன் வளர்த்தனர் …..உண்ண
ருசிகரமான சத்தான உணவு ,உடுத்த வித விதமான
ஆடைகள் என்று தன்
சம்பாத்தியத்தில் பாதியை தன்
மகனுக்காக செலவு செய்தார்.மொத்தத்தில் ராஜா வீட்டு
கண்ணு குட்டியாக வாசு
வளர்ந்தான்.
வாசுவுக்கு கோழி ,கொக்கு ,காடை ,இறால் என்றால்
ரொம்ப அலாதி பிரியம் …ஆனால்
தனலட்சுமி அதுவெல்லாம் செஞ்சு
கொடுக்க மாட்டாள் …ஏன்னா
அவளுக்கு அந்த பிராணிகளை
சுத்தம் செய்யவும் தெரியாது ,எப்படி
செய்யணும்னு தெரியாது ….ஆனா
செந்தில்நாதன் தன் மகனுக்காக
சுத்தம் செய்து சரியான
மசாலாக்களை போட்டு பக்குவமாக
சமைத்து தருவார் …இப்படி
வாசுவுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து
பார்த்து செய்தார் செந்தில்
நாதன் …. வாசுவுக்கு எல்லாமே அவன்
அப்பா தான் …செந்தில்
நாதனுக்கு எல்லாமும் தன்
பையன் தான் ….செந்தில்
நாதனும் வாசுவும் அப்பா
பிள்ளை மாதிரியே இருக்க
மாட்டாங்க . ஒரு மாமன் மச்சான்
போல நண்பர்கள் போல கல
கலன்னு சந்தோசமா மனச
விட்டு எல்லாவற்றையும் பற்றி
பேசுவாங்க .தோளுக்கு மிஞ்சினா
பெத்த பிள்ளைய தோழனா
பார்க்கணும்னு எல்லோரும் சொல்லுவாங்க
ஆனா எந்த அப்பாவும்
செய்ய மாட்டாங்க ஆனா
மத்த அப்பாக்களை போல செந்தில்நாதன்
இல்லை.
பெத்தபுள்ள தோளுக்கு மிஞ்சினா
தோழன் என்கிறதை வாக்கா ,வாக்கியமா
மட்டும் சொல்லாம வாழ்கின்ற
வாழ்க்கையில வாழ்ந்து காட்டினார்.பையனை சந்தோசமா வாழ
வைக்கணும்னு ரொம்பவும் ஆசைப்பட்டார் ஆனா அதற்கு
அவர் பொருளாதாரம் போதியதாய் இல்லை .பையனுக்கு வருங்காலத்துக்கு வேண்டி
நிறைய செய்யணும்னு
ஆசைப்பட்டார் இந்த நேரத்துல
பார்த்து சீக்குலயும் படுத்துட்டார் .கடன் வேற
நிறையவே இருந்தது வீட்டு லோன் ,பெட்டி கடை லோன் ,சீட்டு பணம் என்று
எல்லாமும் அந்த குடும்பத்தின்
மீது விழுந்தது. செந்தில்நாதன் படுத்த
படுக்கையானதால் குடும்ப பொறுப்பு
வாசுவின் மீது விழுந்தது .தன் குடும்பம்
கடன் துயரில் இருந்து
மீண்டு வர அயல்தேசம்
வந்தடைந்தான் ….
ஏஜென்ட் மூலம் அந்த
துபாய் வேலை கிடைத்து
இருந்தது …ஒரு பாலைவனத்துக்கு அருகே
உள்ள சுமார் 150 பேர் வேலை செய்ய
கூடிய கம்பெனி அது .12
மணி நேர
வேலை .மாதத்திற்கு ஒரு விடுமுறை ,கம்பெனி
கேம்ப் அக்காமடேஷன் .விடுமுறை
நாளில் மட்டுமே கேம்ப்பை
விட்டு வெளி வர
முடியும் ஆனால் அந்த பகுதியை
விட்டு வெளி வருவதற்க்கே
பாதி நாள் போய்
விடும் இதனால் மாதத்திற்கு ஒரு
நாள் கிடைக்கும் விடுமுறைக்கு
கூட உடல் அசதியால்
வெளி வர பிடிக்காது …ஒரு பக்கம் உடல்
அசதி மறு பக்கம்
மனசு சிறைப்பறவை போல்
அவதி பட்டது .
நாங்கள் வேலை
பார்ப்பது எரிவாயு உற்பத்தி
செய்ய கூடிய நிறுவனம்
அதனால் சமைப்பதற்கு கூட
கேம்ப்பில் எந்த வித
அடிப்படை வசதியும் இல்லை .கம்பெனி சமைப்பதற்கு
எந்த வித வசதியும்
செய்து தருவதற்கு தயாராக
இல்லை . சாப்பாடு ஹோட்டலில் தான் …அந்த
பகுதியில் ஒரே ஒரு
ஹோட்டல் மட்டுமே இருந்தது ..
அந்த ஹோட்டலை விட்டால் வேறு
எங்கும் சாப்பிட ஹோட்டல்
எதுவுமில்லை .அந்த ஹோட்டலில்
காலையில் ரொட்டியும் ,மதியம் மோட்டா சோறும் ,இரவு காய்ந்து போன
குபூஸும்தான் கிடைக்கும்
..நம் நாட்டை போல்
வாய்க்கு ருசியான சாம்பார் ,ரசம் எல்லாம் அங்கு
கிடைக்காது …சப்ஜி ,தால் ,பாலக் ,என்று வாய்க்கு
நுழையாத ,ருசி இல்லாத வெளி
நாட்டு முறையில் சமைக்க
பட்ட உணவே கிடைத்தது ..
அந்த சாப்பாடை விட்டாலும்
வேறு சாப்பாடு கிடைக்க
வாய்ப்பில்லை பசித்தால் புலி கூட
புல்லை திண்ணுமாம் ….முதல் இரண்டு மாதம்
ஏனோ தானோ என்று
சரியாக சாப்பிடாமல் ஏதோ
மனதின் தைரியத்தில் நாட்களை
ஓட்டி விட்டேன் ,அதன் பின் வந்த
மாதங்களில் வேலை பளு
காரணமாக உடல் சோர்வு
அடைய தொடங்கியது .பிடித்தாலும்
பிடிக்கா விட்டாலும் வாழ்க்கை
கப்பல் ஓட இந்த நரகத்தில்
போராடி தான் ஆக வேண்டும்
..ஆனாலும் அப்பப்ப ஊர்
நினைவுகளில் மூழ்கி மனசு
சந்தோசப் பட்டு கொள்ளும் ஆனால் சில
சமயங்களில் ஊரில் எப்படி
இருந்தோம் இங்கு இப்படி
வாழ்கிறோமோ என எண்ணி
மனசு கனத்து போனதும்
உண்டு .
ஊர்ல ராஜா போல
தனி ரூம் ,ரெண்டு ஃபேன் ,டிவி ,ரேடியோ என ஜம்முன்னு
வாழ்ந்தவன் .என் ரூம்ல
ஆறு பேரு வரைக்கும் தூங்கலாம்
இருந்தாலும் அப்பா நான்
டிஸ்டர்ப் இல்லாம தூங்கணும்கிறதுக்காக பெரிய
வீடா வாடகைக்கு எடுத்து எனக்கு
தனி ரூமு கொடுத்தாரு ..ஆனா இப்ப
இங்க நான் இருக்குற
குருவி கூடு போல
இருக்குற கம்பெனி கேம்ப்ல
ரெண்டு அல்லது மூணு
பேரு தான் தங்க கூடிய
இடத்துல அடுக்கு கட்டில்
போட்டு ஒரு சின்ன
இடத்துல எட்டு பேரு
அல்லது பத்து பேரை
தங்க வச்சு இருக்கானுங்க ..ரூமுக்கு ஒரு
புதிய ஆளு நுழைஞ்சா
ஒரு கெட்ட வாசனை அடிக்கும்
ஆனா அந்த நாத்தத்துல இருந்து, இருந்து
தங்கி, தங்கி
அது பெருசா என்னை
பாதிக்கலை ….ஒரு
காலத்துல மூட்ட பூச்சினா என்னன்னுனே
எனக்கு தெரியாது ஆனா இப்பவெல்லாம்
மூட்ட பூச்சி கடி
இல்லாம தூங்கினதா சரித்திரமே
இல்லாம போச்சு ….டெய்லி காலைல எந்திரிச்சா
பாத்ரூமுக்கு கியூவுல நிக்கணும் ,ஒரு
அவசரத்துக்கு கூட பட்டுன்னு
பாத்ரூம் போக முடியாது .எல்லாமே வேக வேகமாக
நடக்கணும் .பாத்ரூம் போனா பத்து
நிமிஷம் தான் அதுக்கு
மேல உள்ளே இருந்தா
கியூவுல நிக்குற அடுத்தவன்
முட்டுவான் ….ரூம்ல வாய்
இருந்தும் ஊமையாக தான்
இருக்கணும் அவனவன் போன்ல
சாங்கை போட்டு விட்டு
ஹெட் போனை சொருகிவிட்டானா அவ்வளவு
தான் …
அவனவன் ,அவனவன் வேலையை
பார்ப்பான் .இந்த நாட்டில்
வருவதே பணம் சம்பாதிக்க
தான் அதனால் மனிதர்கள்
பணத்தின் பின் ஓடும்
மிருங்கங்களாக இருந்தனர் ..ஒன்றாக
பணி செய்தும் யார்
மீதும் நம் நாட்டை
போல் எந்த வித
நட்பும் தோன்றவில்லை …நட்பை
விடுங்கள் ஒரு ஆத்திர
அவசரத்துக்கு எவனும் வர
மாட்டான் .ஒரு உடம்பு
சரி இல்லைன்னாலும் நாம்ம
தான் பார்த்துக்கணும் .ஒரு ஆறுதலான வார்த்தை
கூட எவன்கிட்ட இருந்தும்
வராது.அதிகமா பேசுன்னா
ஏதாவது உதவி கேட்போம்னு
கூட பணி செய்யுற ஆளுங்களோட
நினைப்பு ……
எத்தனை கஷ்டப் பட்டாலும் ,துயரப் பட்டாலும்
அப்பாவுக்கு வார வாரம் வெள்ளிக்கிழமை
போன் செய்து விடுவேன் .அப்பாவிடம் பேசும்
போது குரல் திக்கும் ,பேசுவதற்கு
வார்த்தைகள் அதிகம் இருந்தும்
பேச முடியாமல் தவிப்பேன் …ஒரு வழியாக என்
கஷ்டங்களை அப்பாவுக்கு தெரிய
விடாமல் பேசி விடுவேன் ….பேசி
முடித்ததும் கொஞ்சம் மனசுக்கு நிறைவாக
இருக்கும் .அப்பாவின் குரலை கேட்கும்
போது ,எத்தனை வலிகள்
இருந்தாலும் மனசுக்கு ஆறுதலாக
இருக்கும் ..அப்பாவுக்கு
உடம்பு தளர்ந்து இருந்தாலும்
அவர் மனசுக்கு தரும்
ஆறுதல் இழந்து போன
என் இளமைக்கு புத்துணர்ச்சி
தரும் .அம்மாவிடம் அதிகம்
பேச மாட்டேன் எப்ப
பார்த்தாலும் குடும்பப் பிரச்சனை ,கடன் பிரச்சனை ,வீட்டு
பிரச்சனைன்னு சொல்லி வாடி
போய் இருக்கும் என்
மனதை மேலும் காயப்படுத்தி
விடுவாள் …அம்மா பாசக்காரி
ஆனால் எப்படி பேச
வேண்டும் என்று தெரியாது …சூதுவாது
தெரியாத இந்த உலகத்தை
இன்னமும் அறியாத ஐம்பது
வயது குழந்தை ,மனசுல
ஆயிரம் பாசம் ,நேசம் வச்சிருப்பா
ஆனா இந்த
பாழா போன பணத்தாலே
என் மனச காயப்படுத்தி
விடுவா .எத்தனை கஷ்டம் வந்தாலும்
எதிர்த்து நின்று சிங்கம்
போல இருந்தவர் என்
அப்பா …அவரிடம் பேசும்
போது எனக்கு வரும்
தெம்பு ,வைராக்கியம் ,முயற்சி ,நம்பிக்கை எல்லாம்…!
மற்றவர்களிடம் பேசும் போது அந்த
உணர்வெல்லாம் எனக்கு கிடைப்பதில்லை.அப்பா மட்டும் என்
கூட இருந்தா இந்த
உலகத்தையே என் காலடியில்
கொண்டு வர முடியும் …
எல்லார்க்கும்
அம்மா பத்து மாசம் வயித்துல இருந்து
சுமந்தாங்கன்னா எங்க அப்பா
என்னை இருபத்தி அஞ்சு வருஷம் அவரு
மனசுல இருந்து சுமந்தாரு ….நான் என்றால்
அது நான் இல்லை …நான் யாருன்னா என்
அப்பாவோட நகல் ,பிரதிபலிப்பு ,நிழல் என்று கூட
சொல்லலாம் .ஏன் என்றால் எனக்கு
எல்லாமுமாக இருந்தவர் என்
அப்பா தான் ….எனக்கு
பிடித்தவைகள் எல்லாம் எனக்கு
கிடைக்க வேண்டும் என்று
நினைத்தவர் ..எனக்கு
தேவையானதை பார்த்து ,பார்த்து செய்தவர்…
எல்லாரும் சொல்வாங்க மாதா ,பிதா ,குரு ,தெய்வம் ன்னு ….எனக்கு
எல்லாமும் என் அப்பா
தான் ….என் பிதாவுக்கு
அப்புறம் தான் அந்த மாதா
தெய்வம் எல்லாம் …..நான் துபாயில் எந்த
விஷயம் செஞ்சாலும் என்
அப்பாவின் நினைவுகளை ஒவ்வொரு
விஷயமும் ஞாபகப் படுத்தும் ….ஒரு நாள் கம்பெனி
அருகே உள்ள அந்த
ஹோட்டலில் சிக்கன் சாப்பிட்டேன் ,மிகவும் ஆறி போய்
இருந்தது அந்த சிக்கன்
துண்டு..
அந்த சிக்கன் துண்டை
சிறிது எடுத்தேன் கொஞ்சம் பிங்க் கலரில்
இருந்தது …நிறம் மாறி
இருந்தும் வேறு வழி
இல்லாமல் உண்டேன் ஆனால்
என்னையும் அறியாமல் கண்ணில்
கண்ணீர் வர தொடங்கியது …..காரணம் எங்க அப்பா
எனக்காக விடியற்காலை அஞ்சு மணிக்கே
எழுந்து சந்தைக்கு போய்
உயிரோடு இருக்கிற விடக்
கோழியை வாங்கி வந்து
காலை 12 மணிக்குள்ளே எல்லா
மசாலாவும் இட்டு அதை
பக்குவமா சமைத்து அது
அடுப்படியில இருக்கிற சூட்டோட இருக்கிறப்பவே
எனக்கு எடுத்து வந்து
அவர் கையாலேயே ஊட்டி
விடுவார் …அப்படி வாய்க்கு
ருசியா சாப்பாடு போட்டு
வளர்த்த அப்பா நான்
இப்படி சாப்பிடுறது தெரிஞ்சா
நிச்சயம் மனசு உடைஞ்சு
போயிடுவாரு ,அதனாலே தான்
நான் எத்தனை கஷ்டப் பட்டாலும் என்
அப்பாவுக்காகவும் என் குடும்பத்துக்காகவும் தினம் தினம்
உருகும் மெழுகுவர்த்தியாய் என்னை
உருக்கி கொண்டு என்
குடும்பத்துக்கு வெளிச்சம் தர
ஆசைப் பட்டேன்.மாச மாசம் தங்குற
இடம் ,சாப்பாடு போக ஒரு
நையாபைசா கூட எனக்குன்னு
எடுத்து வைக்காம குடும்பத்துக்காக அனுப்பி
வைத்தேன் …
வாழ்க்கை நல்ல படியாக
போய் கொண்டு இருந்தது …..என் கடன் முடிவடையும்
தருணம் ,அப்பா சொன்னார் “கண்ணா வாசு நீ மீண்டும்
அந்த ஊர்ல எங்கள எல்லாம் விட்டிட்டு தனியா
கஷ்டப்பட வேண்டாம் .நீ
சீக்கிரம் வந்திடு ,உனக்கு பொண்ணு பாக்குறேன் ,உனக்கு பிடிச்சிச்சுனா கல்யாணம்
வச்சுக்கலாம் அதன் பிறகு
நீ ஊரோட வந்து
ஏதாவது பிழைப்பை பாரு.நீ
எங்களோட இருந்தா தான்
எங்களுக்கு சந்தோசம்ன்னு சொன்னார்”.
அந்த வாரம் நான்
பெற்ற இன்பத்தை இந்த
உலகில் யாரும் பெற்று
இருக்க மாட்டார்கள்.
என் மனம் வண்ணத்துப்பூச்சி போல
ஆயிரம் கனவுகளோடும் ,கற்பனைகளோடும்
எல்லையில்லா மகிழ்ச்சியில் பறந்தது ….அப்பா ,அம்மாவோடு
ஊரில் காரில் போவது
போலவும் ,வருங்கால மனைவி
யாரென்று தெரியாத போது
முகம் தெரியாத என்
கற்பனை மனைவியோடு படம் பார்க்க
சினிமா தியேட்டர் போவது போலவும் ,அவளோடு சின்ன சின்ன
சேட்டைகள் ,குறும்புகள்
செய்து செல்ல திட்டுகள்
வாங்குவது போலவும் ,இந்த உலகை
பார்க்காத என் குழந்தையை
நான் ட்ரோலியில் வைத்து
கடற்கரையோரம் வாக்கிங் கொண்டு
செல்வது போலவும் ஆயிரம் கனவுகள் , கற்பனைகள் …..
எத்தனை சந்தோசம் ,மகிழ்ச்சி ..நான்
நினைத்தவைகள் எல்லாம் நிஜமாக
கூடாதா என மனசு
ஏங்கியது ….
அப்பா அனுப்பும் பெண்ணின்
புகைப்படத்துக்காக
காத்துகொண்டு இருந்தேன் …என் அப்பா அம்மாவோட
என் வருங்கால மனைவியோட
என் தாய் நாட்டுல
நல்ல படியா செட்டில்
ஆகணும் அது தான்
என் வாழ்க்கையோட லட்சியமாக
இருந்துச்சு ….நம்ம ஊர்லயே ஒரு
வேலை ,அப்பா ,அம்மா ஆசை பட்டமாதிரி
ஒரு இடம் வாங்கியாச்சு ,ஊர்ல போய் நல்ல
படியா தொழில் செஞ்சு
வீட்டை கட்டிடலாம் என்ற
நம்பிக்கை மட்டும் என்
நெஞ்சில் இருந்தது …..
இன்னும் இரண்டு அல்லது
மூன்று மாதத்தில் என்
தாய் நாட்டுக்கு செல்ல
போகிறேன் இந்த நரகத்தில்
இருந்து எனக்கு விடுதலை
கிடைக்க போகிறது என்று
மனசு சந்தோசப்பட்டு கொண்டது ….
வாழ்க்கை சில நேரங்களில்
சினிமாவை விட அதிக
திருப்பங்கள் வரும் ,சோதனைகள் வரும் ,துயரங்கள்
வரும் என்பதை என்
வாழ்க்கையின் மூலமே நான்
அறிந்து கொண்டேன் ….
பெண்ணின் புகைப்படம் வரும் என்று
எதிர்பார்த்தவனுக்கு
அப்பாவின் உடல்நிலை சரி
இல்லை அதனால் ஆஸ்பத்திரியில் சேர்த்து
இருக்கிறோம் கொஞ்சம் சீரியஸ்
என்று செய்தி வந்தது …பதறி
அடித்துக்கொண்டு எமர்ஜென்சி லீவு
வாங்கி கொண்டு இந்தியா
சென்றேன் .அப்பாவை காப்பாற்ற
வேண்டும் என்றால் பத்து
லட்சம் செலவாகுமாம் ,அந்த
ஆப்ரேஷன் கொஞ்சம் மேஜர்
ஆப்ரேஷனாம். அப்பாவுக்கு கொஞ்சம் சுகர்
கம்பிளைன்ட் வேறு இருக்கு வேளாவேளைக்கு
சரியா சாப்பிடலைன்னாலும் ,டென்ஷன்
ஆனாலும் கொஞ்சம் மயக்கம்
வரும் நானும் அம்மாவும்
அப்பாவை நல்ல படியதான்
பார்த்துக்கிட்டோம்.
அந்த ஆண்டவனுக்கு கண்ணு
இல்லைன்னு சொல்லலாம் யாருக்கும்
மனசால கூட எந்த
கெடுதலும் செய்யாத எங்க
அப்பாவுக்கு கல்லீரல்ல
கேன்சரை கொடுத்தான் அந்த
கேடு கெட்ட ஈவு இரக்கமில்லாத ஆண்டவன் .இருக்கிறவனா இருந்தா வாரி
வாரி கொடுக்கலாம் ஆனா
நானோ இல்லாதவன் .இப்ப தான் தட்டு
தடுமாறி ,முட்டி மோதி
அடுத்தவனும் மனுஷனா மதிக்கிற மாதிரி
வளர்ந்து வரும் நிலையில
இந்த சோதனையை ,துன்பத்தை
அந்த ஆண்டவன் கொடுத்தது தப்பு …..அந்த வியாதி எங்க
அப்பாவுக்கு பதில் எனக்கு வந்தா
கூட சனியன் போனா
போயிட்டு போதுன்னு விட்டிடலாம் …
என் குடும்பத்தோட ஆணி வேர் ,தூண் ,உயிர் எல்லாமே என்
அப்பா தான் …என் அப்பாவ எப்படியாவது
காப்பாத்திடணும் அது மட்டும்
தான் என் கண்ணுக்கு
தெரிஞ்சது ..என் அப்பாவை
விட இந்த உலகத்துல
எதுவும் பெருசா தெரியலை
சொத்து பணம் எல்லாம்
என் அப்பா கால்
தூசுக்கு சமம் அதனாலே
வேறு வழி இல்லாமல்
அவசரத்துக்கு நான் வாங்கிய
லேண்ட்டை சேல் செய்தேன் எட்டு
லட்சம் மதிப்பு உள்ள
இடம் என் சூழ்நிலை
அறிந்து அந்த நிலத்தை
அஞ்சு லட்சத்துக்கு தான் புரோக்கர் மூலமாக ஒருவன் வாங்கினான் …சீட்டு பணம் ரெண்டு
லட்சம் கடன் வாங்கினேன் ,உறவினர்
ஒருவர் சகோதரி உறவு
முறை எனக்கு வேண்டும் .அவர் நகையை
அடமானம் வைத்து பாங்கில்
வைத்து மூன்று லட்சம் பணத்தை பெற்றேன் …எப்படியோ என் அப்பாவை
காப்பாற்ற ஆப்ரேஷனுக்குரிய பணத்தை
சேர்த்து விட்டேன் …டாக்டர்
சொன்னார் தம்பி கவலை
படாதீங்க அப்பாவுக்கு எதுவும்
ஆகாது ..ஆபரேஷனுக்கு அப்புறம் அப்பா
நல்லபடியாய் ஆயிடுவார் பழைய மாதிரி
நீங்கள் உங்கள் அப்பாவை பார்க்கலாம் என்றார் .
ஒரு வழியாக ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்தது ..அப்பாவை ஐ.சி .யு- வில் பத்து நாள்
வைக்க வேண்டும் என்றனர் .எனக்கு லீவு
முடிந்து விட்டதாலும் ,என் கடனும் என்
சூழ்நிலையும் மீண்டும் அந்த
நரகத்துக்கு போக வைத்தது ..வர மனமில்லாமல்
அப்பாவை ஐ .சி .யு அறைகண்ணாடி
வழி மூலம் பார்த்து
விட்டு என் உயிரை
அப்பா காலடியில் வைத்து
விட்டு செத்த பிணமாக
விமானத்தில் ஏறி மீண்டும்
அந்த நரகத்துக்கு சென்றேன் ….
ஒரு மாதம் அப்பா
அந்த ஆஸ்பத்திரியிலேயே தங்க
வைக்கப்பட்டார் அம்மா கையில் ,காதில் இருந்த
தங்க நகையை விற்று
அப்பாவுக்கு வைத்தியம் பார்த்தாள் ….யார் கண்ணு பட்டதோ
என்னவோ தெரிய வில்லை ….ஆஸ்பத்திரியில்
இருந்து வீட்டிற்க்கு வந்த சில
வாரங்களில் அப்பாவின் உயிர்
இந்த உலகை விட்டு
போனது ….அந்த பாழாய்
போன டாக்டர் காலில்
எத்தனை முறை விழுந்து
இருப்பேன் .நீங்க தான்
எங்க அப்பாவை காப்பாத்தணும் என்று ..ஒரு
தெய்வம் போல அவனை
நம்பி இருந்தேன் ..லட்ச கணக்குல
பணத்தை வாங்கிட்டு என்ன
வைத்தியம் பண்ணான்னு தெரியலை …ஆப்ரேஷன் பண்ண ஒரு
சில மாதத்திலேயே அப்பா
செத்திட்டாரு.
அவருடைய இறப்பு என்
கண்ணின் வசீகரத்தை எடுத்து சென்றது
..என் உதட்டில் இருந்து
உண்மையான புன்னகையை எடுத்து சென்றது …ஒவ்வொரு
பிள்ளையும் தன் பெற்றோர்க்கு
கடைசி கால சடங்கை
நிறைவேற்ற வேண்டுமாம் என்
அப்பாவின் இறப்பிற்கு கூட
தாயகம் வர முடியாத
பாவியாகி விட்டேன் ….நெஞ்சம் வலித்தது …துடித்தது ,கனத்தது ….அம்மாவுக்கு எதுவும் தெரியாதே ..அப்பா இல்லாமல்
அம்மா என்ன என்ன
கஷ்டத்தை அனுபவிப்பா ,அதை
நினைக்கும் போதே மனசு வலிச்சு ,இந்த உலகமே வேண்டாம்னு உயிரை மாய்ச்சுக்கலாம்னா நானும்
இல்லைன்னா அம்மாவை யார்
பார்த்துக்கவா ?என்ன விட்டா
அம்மாவுக்கு வேறு நாதி
இல்லையே?
சீட்டு கடன் லோன் ,உறவினரான
சகோதரியின் கடனுக்காக அம்மாவை
தனியே வேதனையில் மூழ்கடிக்க
விட்டு நானும் அந்த
பழைய நரகத்திலேயே தினம்
தினம் நொந்து நொந்து சாகலாம்
என முடிவெடுத்தேன் …என்
வாழ்க்கையில் மேடு இருக்கிறதோ
இல்லையோ ஆனால் நிறைய
பள்ளங்கள் இருக்கிறது தினம் தினம்
விழுகிறேன் ,பல காயங்களோடும் ,வலிகளோடும் சிகரம்
மேல வெற்றி என்னும்
இலக்கை அடைய போராடி
கொண்டு இருக்கிறேன் என்
தாயின் புன்னகைக்காக.
கண்ணு இல்லாத ,இரக்கம்
இல்லாத கடவுளே என்
தாய் அவள் வாழ்நாள்
முடிவடைவதற்குள்ளாவது
அவளுக்கு சந்தோசத்தை தர
கூடிய வகையில் என்
வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்து ……வாழ்க்கையில்
சோதனை இருக்கலாம் …சோதனையே வாழ்க்கையாக கூடாது கடவுள்னா இரட்சிக்கணும் ,துன்புறுத்த கூடாது
?!
வாசுவின் வாழ்வில் போராட்டம்
தொடர்கதையாகிறது ………..
வெளியே
அழகாய் மிளிரும் அடுக்கு
மாடி கட்டிடங்கள்
உள்ளே
அலங்கோலமாய் அடுக்கு மாடி
கட்டில்கள்
முதுகு தட்டி உறங்க
வைப்பாள் என் அன்னை -இங்கோ
என்னை உறங்க விடாமல்
உடம்பை இரணப்படுத்துகிறது -மூட்டப்
பூச்சி
அம்மா ஊட்டும் அறுசுவை
உணவுக்கு ஈடாகுமா ??
அரபு நாட்டு குளிர்சாதன
பெட்டிகளில் கிடைக்கும்
காஸ்ட்லி பிஸ்சாவுக்கும் ,பர்கருக்கும் …
ஆற்று நீராடல் ,வாய்க்கால் பாய்ச்சல் ,பம்பு செட்டு
குளிகை
மறந்தே போச்சு
அனல் கக்கும் வெந்நீர்
குளியலில் ….
பாவாடை ,தாவணி உடுத்தும்
கன்னியர்களின்
கலையழகை கவலையில்லாமல்
கள்ளத்தனமாய் ரசித்த
விடலை விழிகள்
ஏனோ விகாரமாய் மேக்அப் பூசும் பிலிப்பிணிகளின் சிலிகான் முகத்தை
ஆடை குறைத்து காட்டும் வெள்ளை தோல்
உடலை இளமை இருந்தும்
ரசிப்பதில்லை-விரும்புவதில்லை
அப்பாவின் அனுசரணையான அன்பு
பேச்சு …
அம்மாவின் மடி சாய்ந்து
கவலை இல்லாமல் உறங்கும்
கள்ளம் கபடமில்லாத
அந்த குழந்தை பருவம் மீண்டும்
கிடைக்குமா என்ன ?
எல்லாம் கனவில் மட்டுமே
நடக்க கூடிய
கானலாய் என் காலம்
மாறி போச்சு ….
அப்பாவின் மரணம் கேட்டு
உயிர் மூச்சு மட்டும்
தான் நின்னு போக வில்லை …
வாழ்வின் மற்றவைகள் எல்லாம்
காணாமல் போச்சு …
இங்கு அழுதால் அழுவதற்கும்
யாருமில்லை
சிரித்தால் சிரிப்பதற்கும் யாருமில்லை
நான் பார்க்கும் முக
கண்ணாடியை தவிர ….
ஏனோ நட்பு ,உறவு
கூட நாடகமாய் தான்
தெரிகிறது …..
பல சோதனை ,துயரம் வந்த
போதும்
இந்த நரகத்தில்
பயணம் செய்து கொண்டு
இருக்கிறேன்
என் தாயின் புன்னகைக்காக ….
நான் சேர்க்கும் ஒவ்வொரு
காசும்
தூக்கத்தை மட்டும் தொலைத்து
சேமித்தது அல்ல ….
நிம்மதியை தொலைத்து சேமித்ததும்
தான் …..
என் வாழ்க்கை எப்படி ,என்ன
ஆக போகிறது
என்பது அந்த நீதி ,நேர்மை ,இரக்கம் உள்ள
அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் …..
உண்மையுடன் இந்த நொடி பொழுது வரை
உழைக்கிறேன் ….என்
தாயின்
புன்னகைக்காக …….!!
உயிர் மூச்சுடன் மெழுகை போல்
உருகி கொண்டு இருக்கிறேன்
அழிவது நான் என்றாலும்
பரவாயில்லை ஆனால்
என் தாயின் வாழ்வில்
ஒளி பிரகாசமாய் வீசணும் ….
அதுவே என் ஆன்மாவின்
துடிப்பு …….
***
No comments:
Post a Comment