லா, நீங்கள் எதிர்பார்க்கும் ஆபாசப் பதிவல்_லா. பக்கா ஆன்மீகப் பதிவு. ஆனால் விஷயம் வேட்டிக்குள்ளேயிருந்துதான் கிளம்பியது என்பது நிஜம். நோ நோ... குழப்பம் பயம் கூடவே கூடாது. சொல்கிறேன், போனவருடம் கேரளா டூர் போய்விட்டு பொள்ளாச்சி வழியாகத் திரும்பும்போது உடுத்திருந்த ஆடைகள் எல்லாம் நனைந்திருந்ததால் (டூர் கிளம்பும்போதே நதீம் வெடைத்தான், 'காரைக்காலுக்கு போறோம்டு நெனப்பு போலக்கிது வாப்பாவுக்கு..' என்று) ஒரு வேட்டி எடுத்தேன். உடுத்துவதற்காகப் பிரித்து உள்ளே கையை விட்டபிறகுதான் அது தட்டுப்பட்டது. சின்னதுதான், ஆனாலும் அதி முக்கியமானது. ஆமாம், ஞானி வேதாத்திரி மகரிஷி சொன்ன உபதேசம் , அழகிய விளம்பரமாக. சல்யூட் ராம்ராஜூக்கு. டெக்ஸ்டை தட்டச்சு செய்தால் அதற்கும் சில பதிப்பகக் குரங்குகள் கையைக் கடித்தாலும் கடிக்கும். ஆதலால் இமேஜை மட்டும் இங்கே காட்டுகிறேன். காப்பி செய்ய வசதியாக டெக்ஸ்ட்தான் தேவையென்றால் இங்கே போகவும். pdfஆக வேண்டுமா? நம்ம சென்ஷியை தொடர்பு கொள்ளவும்! இனிய பொங்கல் வாழ்த்துகள். - ஆபிதீன்
மிளகாய் சிறிசா இருந்தாலும் காரம் கடுமைதானே....!
ReplyDeleteசின்னது பெரிசென்ன..? விசயம்தான் முக்கியம்..!!
அதனாலெதான் COTTON RICH..