Tuesday, September 10, 2019
நம் உறவினர்கள்! - முகநூலில் மீரான் மைதீன்
உறவினர்களில் பெரும்பான்மையினர்.
1)அவர்கள் வளர்ந்து விட்ட பின்பு,நாம் அவர்களிடம் போய் சேவகர்களா நிற்க வேண்டுமென்ற விருப்பம் உடையவர்களாக இருக்கின்றனர்.
2) சம பொருளாதார வளர்ச்சியுடையவர்கள் பழய சண்டைகளை விட்டு விட்டு புதிய நட்பில் நன்றாகவே குலாவுகின்றனர்.
3) பொருளாதார உத்திரவாதம் வந்த பிறகு அவ்வாறான உத்திரவாதமில்லாத உறவினர்களுக்கு அறிவுரை வழங்க விருப்பமுடையவர்களாக இருக்கின்றனர்.
4) அடுத்தடுத்து வீடுகளை கட்டிக் கொள்ளும் இரண்டு சகோதரர்கள் அவன் வீட்டிலிருந்து இவனையும் இவன் வீட்டிலிருந்து அவனையும் ஒழித்துக்கட்டும் அக விருப்பமுடையவர்களாக இருக்கின்றனர்.
5)உறவுகளிலுள்ள இரண்டு சம போட்டியாளர்கள் முடிந்த மட்டும் பிற உறவினர்களை எப்படியாவது தாங்கள் அடிவருடிகளாக மாற்றும் முயற்ச்சிகளை மேற் கொள்பவர்களாக இருக்கின்றனர்.
6) உறவுகள் பரஸ்பரம் சந்திக்கும் போது தாங்களிடம் பேசிக்கொள்ள போதுமான விசயங்கள் இல்லாமல் பிற பலவீனமான அல்லது பலமான உறவுகளைப் பற்றி புரளி(கழுவி ஊற்றுவது)பேசுபவர்களாக இருக்கின்றனர்.
இனி பின்னூட்டத்தில் நீங்களும் தொடரலாம்.
மீரான் மைதீன்
https://www.facebook.com/meeran.mitheen
*
பின்னூட்டங்கள் :
டாக்டர் கான் : என்ன அண்ணே.... உறவு தொரத்தி தொரத்தி அடிக்குதா...😁😁😁😁😜
Shahul Hameed : வீட்டுக்கு வீடு வாசப்படி தான்
அபு ராஹினா: ஒற்றுமை என்னும் கயரை பற்றிக்கொள்ளுங்கள் என்று முகநூலில் அறிவுரையை வாரிவழங்குகின்றனர்.
Santhi Lal : என் சில உறவினர்கள் - மேற்படி - குணம் உடையவர்கள். ஆனால் - நான் நல்ல உறவினர் - என்று என் உறவினர்கள் கூறுகின்றனர்
Denson Arumanai : எல்லாம் சரிதான். ஆனா ஒண்ணுமே பண்ணமுடியாது
Rabeek Raja : சம என்பதில் இருப்பது பொருளாதார அந்தஸ்து. ஆக உறவுகளை, உறவுகளின் உறவுகளைப் பொருளாயதமே தீர்மானிக்கிறது.
Sayed Ali : ஆஹா ஓஹோ பலே பலே.....அதுலயும் "அவனா" ண்ணு ஒரு கேள்வி கேப்பான் பாருங்க.....அங்கத்தான்.....
Kanmani Rasa : ஏதாச்சும் சொல்லாம்னா எல்லா சொந்தக்கார பயபுள்ளகளும் பேஸ்புக்ல இருக்குதே....என்ன பன்னலாம்
Dharma Singh : உண்மை அருமை தோழர்
Bysal Bysal உண்மையானப் பதிவு
Thai : தோழர் உறவு என்ற சொல்லே கொஞ்ச நாள் தான்..பெறவு அது செத்துப் போய்விடும்
Neelan Kanishka : வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் னு அப்பவே பாடிட்டாங்களே!
அருள் ஸ்நேகம் : வசதியானவன் உசத்தியானவனும் எளியவன் கீழானவன் எனும் முதலாளித்துவ உறவுமுறை சகோதரங்களானாலும் தத்துவம் மாறுவதில்லை.உடன் பிறந்த சகோதரங்களானாலும் வசதிபடைத்த அக்கா தம்பி குடும்பம் தன் வீட்டுவேலைக்கு வரமாட்டார்களா என்று தேடுகின்றனர்.அவர்களுக்கு சிறந்த அறிவும் ஞானவும் கடவுள் கொடுத்ததனால்தான் இந்த வசதிவாய்ப்புக்களெல்லாம் வந்ததென்று பேசிக்கொள்கின்றனர்.
Jafar Jafar : சில மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு மற்றவர்கள் யாரும் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து விடக்கூடாது.. அவர்கள் நம்மிடம் வியாபாரங்கள் எப்படி இருக்கிறது என கேட்டால்
Abu Haashima ; எனக்கு பேஸ்புக்கில் கொஞ்சம் கூடுதல் லைக் வருவதைப் பார்த்து என் உறவினர் ஒருவர் என்னை பிளாக் பண்ணிட்டாரு.
ஜி.எம். எஸ். ஷபீக் ; Fact fact
வேலாயுதம் பொன்னுசாமி ; இதில் நீரடித்து நீர்விலகுமா என்ற தத்துவம்வேறு.
MP Manimozhy ; ஆனாலும்... குற்றம்பார்த்தால் சுற்றமில்லை... சிலசுற்றங்களுக்கோ வாழ்வுவந்தாலும் இல்லாவிடினும் குற்றம்காணும் குணம் குற்றமாகவே தோன்றுவதில்லை ..
Lawrance S ; செல்வமீட்டலையே வாழ்வின் நோக்கமாகக்கொண்ட சமூகம்தானேயிது.
Slm Hanifa ; மீரான் மைதீன் என்னவொரு பதிவுடா தங்கம் ... நம்ம நிலைமையும் இப்படித்தான்டா 😛😛😛
Anisha Maraikayar ; இதுனால தான் என்னவோ கையில காலுல விழுந்தாவது உறவுகளை பேணிக்குங்கன்னு சொன்னாங்களோ என்னவோ. ஒரு காலத்தில் நம் வளர்ச்சிக்காக உதவி செய்த உறவினர்கள், பின்பு நாம் நல்ல நிலைக்கு வந்துவிட்டாலோ அல்லது நாம் நாலு மனிதர்களுக்கு உதவும் வளர்ச்சி அடைந்தோலோ அவர்களுக்கு பொறுப்பதில்லை. அவர்கள் கைகள் உயர்ந்தும் நம் கரங்கள் தாழ்ந்தும் எப்போதும் இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள்
Jabeer NM ; யதார்த்தம்.
SK Gangadharan ; உறவுகளின் அலசல் அருமை. உறவுகள் பலவிதம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment