*
கூகுள் ப்ளஸ்ஸில் சில தினங்களுக்கு முன்பு நண்பர் சுரேஷ் கண்ணன் எழுதியது :
நண்பர் Anand Raghav மூலம் இந்தக் குறும்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. He made my day. சத்யஜித்ரே எழுதிய அறிவியல் புனைவு சார்ந்த சிறுகதையை அபாரமாக இயக்கியிருக்கிறார் சுஜாய் கோஷ்.
மனிதனா, மனிதனால் உருவாக்கப்பட்ட இயந்திரமா, யார் சிறந்தவர் என்கிற தத்துவார்த்தமான கேள்விக்கு விடை காண முயற்சிக்கிறது குறும்படம். ஐசக் அசிமோவ் போன்றவர்கள் எழுதிய அபுனைவுகளிலிருந்து தமக்கான தாக்கத்தை சத்யஜித்ரே பெற்றிருக்கக்கூடும் என்றாலும் கீதை சொல்லும் தத்துவத்தின் மேல் நின்று இதிகாச பின்னணியில் அவர் இந்தச் சிறுகதையை எழுதியிருப்பது பிரமிக்க வைக்கிறது.
ரோபோ என்பதற்காக நுட்பங்களை இறைத்து எவ்வித கோணங்கித்தனங்களையெல்லாம் செய்யாமல் இயல்பான ஒரு கோயிஞ்சாமியை உலவ விட்டிருப்பது ரசிக்க வைக்கிறது.
சவுரப் சுக்லா போன்ற நடிகர்கள் ஒரு படைப்பை மேலதிக உயரத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். இனி ரேயின் சிறுகதையை தேடி வாசிக்க வேண்டும். அதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்தக் குறும்படம்.
*Thanks to : Suresh Kannan & LargeShortFilms
No comments:
Post a Comment