Wednesday, May 2, 2012

உஸ்தாதின் கடைசி நேர்காணல்

’புது எழுத்து’ இதழில் (ஜனவரி - ஏப்ரல் 2007) வெளியானது, நன்றிகளுடன்...
***
உஸ்தாதின் கடைசி நேர்காணல்தமிழில் சாந்தி சாதனா


(புதன்கிழமை ஆகஸ்டு 23, 2006)

பதினான்கு வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த அவரது மனைவியின் மரணம் ஷெனாய் மாமேதையான பிஸ்மில்லாகானை தேற்றமுடியாத மீளாத்துயரில் ஆழ்த்தியது. ஆனால் அவர் அத்துயரத்தை 'ஷெனாயை' தனது 'மனைவியாக' (பேகம்) ஏற்பதில் மாற்றிக் கொண்டார்.

'பாரதரத்னா'வான உஸ்தாத் பிஸ்மில்லாகான் தனது ஷெனாயை தனது படுக்கையில் தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டார். அது அவரைக் கவர்ந்தது. 'அது அவருக்கு இசையையும் ராகங்களையும் பற்றி நினைக்கும் சக்தியை அளித்தது' என்று கூறுகின்றனர், அவரது மரணத்திற்கு முன்பான முந்தைய தினத்தன்று மாமேதையின் கடைசி நேர்காணலை கண்ட தம்பதிகளான நீனா ஜா மற்றும் சிவ்நாத் ஜா. மறக்கப்பட்ட கலைஞர்களின் நலனுக்காக அர்ப்பணித்து கொண்ட பிரதிநிதியாக 'பிஸ்மில்லாவை' ஜா தம்பதி கண்டனர். ஆகஸ்டு 18-19 அன்று பதினாறு மணிநேரம் உஸ்தாத்துடன் தங்கி அவரது உடல்நலம் மற்றும் பல விஷயங்கள் பற்றி கேட்டறிந்தனர், 'இந்தியா கேட்டில்' வாசிக்கும் அவரது நிறைவேறாத ஆசை உட்பட.

'நான் இன்னும் பயிற்சி செய்த வண்ணம் இருக்கிறேன்...... புதிய ராகத்தை உருவாக்க, ராக ப்ரவாகத்தை இந்தியா கேட்டில் ஏற்படுத்த' என்று கூறினார் ஜா தம்பதியிடம், கோவில் நகரமான வாரணாசியின் 'ùஉறரிட்டேஜ் மருத்துவமனை' அறை எண். 101ல் படுக்கையில் படுத்த வண்ணம்.

ஆகஸ்டு 9 ஆம் தேதி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜா தம்பதியால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. மிகவும் தளர்ச்சியாகவும், உடல் நலமற்ற ஷெனாய் மாமேதை இந்த நீண்ட நேர்காணலின் போது அழுதார், தூங்கினார், பழைய நினைவுகளில் ஆழ்ந்தார். இழந்த எண்ணங்கள் மற்றும் அவரது கனவுகளைப் பற்றி பேசினார். குறிப்பாக மெல்லிசை அரசியான லதா மங்கேஷ்கரை மரணத்திற்கு முன்பாக சந்திக்க விரும்பினார். 'அவர் (லதா) எனது இளைய சகோதரி போன்றவர். அவரது குரலில் அற்புத சக்தி இருக்கிறது. நான் அவரை சந்திக்க வேண்டும்' என்று கூறினார்.

அவருக்குப் பிரியமான பாடகர் பற்றி கேட்கும் போது பிஸ்மில்லாகான் கூறினார், எனக்கு "பேகம் அக்தரைப்’ பிடிக்கும். ஆனால் லதாவுக்கு நிகர் லதாதான். இன்றைக்கும் அவரிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. சிலரிடம் மட்டுமே அவரது குரலின் அதிசயம் இருக்கும். இது சம்பந்தமாக இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார். "நாங்கள் (நானும் எனது மனைவியும்) தூங்கிக் கொண்டிருந்தோம். நள்ளிரவு. எங்கோயோ, யாரோ பேகமின் இசைத்தட்டை ஒலிக்கச் செய்து இருந்தனர். 'தீவானா பனா தீ ... நான் திடீரென்று எழுந்தேன். பாடலை அனுபவித்த வண்ணம் இருந்தேன். எனது மனைவியை எழுப்பினேன். (காஃபி குஸ்ஸô ஹோ கயி) அவளுக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. நள்ளிரவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? (ஆதி ராத் மே க்யா ஹோ ரஹா ஹை?). 'இது என் அறிவிற்கு அப்பால் உள்ளது. நரகத்திற்கு போ' என்று நான் அவளிடம் கூறினேன். அத்தகைய கடுஞ்சொல்லை அவரது மனைவியிடம் உபயோகித்த அவர் கூறினார், 'ஆமாம் அவள் என் மனைவி' நான் மிகவும் அவளை நேசிக்கிறேன்.' அடுத்த நாள் எனக்குத் தெரிய வந்தது. நள்ளிரவில் நான் கேட்டது இசைத்தட்டு அல்ல, ஆனால் பேகம் அக்தரே பாடிக் கொண்டிருந்தார் என்று. அந்த இரவை என்னால் மறக்க முடியாது. விஸ்வநாதர் ஆலயம் மற்றும் மங்களாதேவி ஆலயம் இரண்டிற்கும் அவரால் போக இயலாதது பிஸ்மில்லாகானை மிகவும் வருத்தமடையச் செய்தது.

அவருடைய குடும்பத்தினரைப் பற்றி கூறும்போது சொன்னார், 'பெரிய மகனான மெஹ்தாப் ஹ÷சைன் ஷெனாயை நன்றாக வாசிப்பவன். அவரைப் பொறுத்தவரை நய்யாரும் நன்றாக வாசிப்பவன். ஆனால் அதிக பிரியத்துடன் அவர் பேத்தி கேகாஷானைப் பற்றி கூறினார். "அவள் நல்ல பெண். எனக்காக என்னை கவனிப்பதில் மிகவும் கவனம் எடுத்துக் கொள்வாள்." ஏன் அவர் பனாரûஸ விட்டு வெளியேற விரும்பவில்லை என்ற கேள்விக்கு பிஸ்மில்லாகான் பதிலளித்தார்.

"கடவுளே ... (யா அல்லா) நீங்கள் உங்களது தாயை விட்டுவிட்டு இருப்பீர்களா? நான் பனாரûஸ விரும்புகிறேன். விஸ்வநாதர் ஆலயத்தை விரும்புகிறேன். எனது மகன்கள் மற்றும் மகள்கள், அவர்களின் குழந்தைகள் என அனைவரையும் விரும்புகிறேன். நான் மிகவும் பெரிய குடும்பத்தை உடையவன். அவர்களின் முன்பாக இறக்க விரும்புகிறேன். உண்மையில் உஸ்தாத் கவனித்து வந்த குடும்பம் 66 உறுப்பினர்களைக் கொண்டது. உணர்வுப் பூர்வமாகக் கூறினால், அவர் "பிஸ்மில்லா ஓட்டல்"நடத்தியது போன்றது என்கிறார் அவரது மகன்களில் ஒருவர்.

அவருக்கு பிறகு அவரது ஷெனாய் என்னவாகும் என்ற கேள்விக்கு மாமேதை கூறுகிறார். என் மகன்கள் மெஹ்தாப் மிகவும் நன்றாக வாசிக்கிறான். நய்யாரும் நன்றாக வாசிக்கிறான். ஆனால் அவர்கள் இசையிலும், பயிற்சியிலும் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். மத சார்பற்ற சிறந்த மனிதரான இவர் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கூறும் இவரது செய்தி - "ஹிந்து, முஸ்லீம், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள் அனைவரும் பரம்பொருளின் படைப்பு.

நமது சமுதாய அமைப்பு அவர்களை பல்வேறு ஜாதியினராகவும், வர்ணத்தவராகவும் பிரித்துள்ளது. காலம் மாறிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு நாம் அனைவரும் இறைவனின் படைப்பு என்று உணர்கிறார்களோ அப்பொழுது அமைதியும் அன்பும் நிலவும். எதிர்பார்த்திருங்கள்."

("சமய் பதல் ரஹா ஹை ஜிஸ் தின் லோகோங் கோ யே பாத் சம்ஜ் மே ஆ ஜாயேகி ஹமாரா பைதாஷ் ஏக் ஹை தபி ஷாந்தி அவுர் ப்ரேம் ஆயேகா .... இந்தசார் கரோ")

***
நன்றி : புது எழுத்து, கீற்று

1 comment:

  1. மதிப்புமிக்க பதவிக்கு நன்றி ஐயா.இது எனக்கு மிகவும் உதவுகிறது. நீங்கள் எங்களுக்கு இன்னும் ஏதாவது பரிசளிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் புதிய தலைப்புகளுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.
    தமிழ் வயதுவந்தோர் கதை

    ReplyDelete