கார்டியன் -ல் வந்த ஃபாஸெல் ஹவ்ராமியின் (Editor : Kurdishblogger.com ) . பழைய கட்டுரையைப் படித்துவிட்டு இப்போது கேள்வி கேட்பவர் நம்ம மஜீத் ஹ(வ்)ராமி. இருக்கிற பிரச்சனை பத்தாதென்று இவர் வேறு! நாம் அறியாத தமிழில் நன்றாக மொழிபெயர்த்து அனுப்பியிருக்கிறார். போடுவோம், நன்றியுடன். - ஆபிதீன்.
***
source : http://www.guardian.co.uk/world/iran-blog/2012/mar/06/iran-temporary-marriage-law-sigheh
***
இந்த வாரம், ஈரான் பாராளுமன்றத்தில், ஆண்கள் அவர்கள் விரும்பும் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் பாலியல் தொடர்புகொள்ள அனுமதிக்கும், சர்ச்சைக்குரிய, ஷரியா சட்டம் மூலமாக அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் "சிகேஹ் அல்லது தற்காலிக திருமணம்" (sigheh) என்ற உள்நாட்டு சட்டத்தில், ஒரு புதிய திருத்தத்தை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஈரானில் திருமணத்திற்கு வெளியே செக்ஸ் என்றால் 100 கசையடி, விபச்சாரம் விஷயமென்றால் கல்லெறிந்து கொல்லும் மரண தண்டனை என்கின்ற அளவிலான குற்றம். எனினும், சிகேஹ் என்ற நடைமுறைப்படி, ஒரு மனிதன் ஒரு பெண்ணை, குறிப்பிட்ட மத சடங்குகள் மூலம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் திருமணம் செய்து கொள்ள முடியும். இத்திருமணம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டியதில்லாமலேயே, ஒரு சில நிமிடங்கள் முதல் பல ஆண்டுகள் வரை நீடிக்கும். தற்காலிக திருமணங்களை ஆண் நினைத்தால், எந்த நேரத்திலும் முடித்துவைக்கமுடியும், ஆனால் பெண்களுக்கு விவாகரத்து உரிமை இல்லை.
அனைவரும் ஆண்களாலான, 104 உறுப்பினர்கள் மூலம் கடந்த திங்களன்று நிறைவேற்றப்பட்ட புதிய திருத்தம், கர்ப்பம் போன்ற குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பதிவு தேவை என்று சொன்னாலும், முறையான பதிவு இல்லாமல் சிகேஹ் நடப்பதற்கு பெருமளவில் அனுமதிக்கவே செய்கிறது.
சத்தார் ஹிதாயத்காஹ் என்ற ஒரு எதிர்க்கட்சி எம்.பி., . "நாளை முதல், ஒருபெண்கூட தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் பாலியல் உறவோடு இல்லை என்று உறுதியாக இருக்க முடியாது. எனவே இப்போது இங்கு (ஈரானுக்கும்) மேற்குலகுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. யார் வேண்டுமானலும் 'தற்காலிக திருமணம்' உடன்பாடு உள்ளது என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே, ஒருவருடன் பாலியல் உறவு கொண்டிருக்க முடியும் " என்று கூறியதாக எத்திமாத் என்ற சீர்திருத்தவாத செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
சிகேஹ் பதிவு செய்யப்படத் தேவையில்லை என்று கூறுபவர்கள், அது தனிப்பட்ட உரிமை சம்பந்தப்பட்டஒரு விஷயம் என்று வாதிடுகின்றனர். செக்ஸ் உண்மையில் ஒரு தனிப்பட்டவிஷயம்தான். ஆனால் பாலியல் என்று வரும்போது ஈரான் மக்களின் தனிப்பட்ட உரிமையை மதிப்பது கிடையாது என்பதுதான் உண்மை. திருமணம் அல்லது தற்காலிக திருமணம் வெளியே பாலியல் விவகாரங்கள் குற்றங்கள் கருதப்படுகிறது. நீண்டகாலமாகவே, சட்டத்திற்குப் புறமாக, ஆண்களுக்கு ஆதவாக, ஆண்கள் அவர்கள் விரும்பும் காலம் வரை பெண்களைப் பாலுறவு கொள்ள அவர்களுக்கு உரிமை கொடுத்து, ஆதரவாக சிகேஹ் - தற்காலிக திருமண சட்டம் - முறைப்படுத்தப்பட்டுள்ளது.
இப்புதிய திருத்தங்கள், பெண்கள் உரிமைகளை பெரிதாக ஒன்றும் அங்கீகரிக்கவில்லை. மேலும், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டு நிலையைக் கண்டுகொள்ளாத, ஈரானிய குடும்ப அமைப்பின் அடித்தளத்தை அச்சுறுத்தும் பழைய சட்டம் தொடரவே அனுமதிக்கின்றன.

ஹூம்......... நல்ல சட்டம் சிஹேக் என்ற பெயரில் தலையை சீவாமலிருந்தால் நல்லதே..! நான் வேலை பார்த்த இடத்தில் ஒரு ஈரானி இஞ்ஜினியர் இப்படித்தான் சொன்னார், "நான் 60, 70 கி,மீ மேலாகப் பயணம் செய்கிறேன் தினமும். அதாவது துபை மரினாவிலிருந்து ஷார்ஜா ஹம்ரியாவுக்கு (அஜ்மானுக்கும் உம்மல் குவைனுக்கும் இடையில் உள்ளது)பயணம் செய்கிறேன். 50 கி.மீ க்குமேல் பயணம் செய்யும் பயணி நோன்பு வைக்கவேண்டிய அவசியமில்லை. அதனால் எனக்கு நோன்பு கடமை கிடையாது" என்று தன்னை நியாயப் படுத்திக்கொண்டார்.
ReplyDeleteசட்டம் என்னவோ புதுசு மாதிரி தெரிந்தாலும் நடைமுறை பழசுதான். எத்தனையோ அரபி மும்பபயிலும் ஹைதராபாத்திலும் இந்த மாதிரி கல்யாணம் பண்ணி மஜா பண்ணிட்டு வரலையா? எங்க நாகூரில்கூட ஃபாத்திஹா கல்யாணம் நடக்கத்தான் செய்கிறது. அல்லாஹ் கரீம்.
சட்டம் பழசுதான். ஒரு திருத்தம் மட்டுமே புதுசாம் நானா.
Deleteஒருவேளை கர்ப்பம் கிர்ப்பம் தரிச்சுக் கிரிச்சு ஏதாவது வில்லங்கம் கில்லங்கம் ஆச்சுன்னா,
அப்ப மட்டும் இந்த சிகேஹ் ஐ பதிவு செய்யலாமாம்.
பழைய சட்டத்தின்படி தற்காலிக திருமணங்களை, பதிவு செய்யத் தேவையில்லையாம்.
என்னென்னவோ சொல்றாங்க நானா, நமக்கு ஒண்ணும் புரியமாட்டேங்குது!:-(
மஜீத்...
ReplyDeleteஇப்படி
அசட்டையா சொன்னா எப்படி?
இந்த விஷயத்தை
விரிவானத் தளத்தில்
பதிவு செய்தே ஆகணும்.
ஏனெனில்...
நாமெல்லாம்
முன்மாதிரி சமூகம் இல்லையா?
மிக அருமையாக
ஹமீது ஜாஃபர் நாநா
கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
இதில் சியா, சுன்னி
வித்தியாசப்பாடெல்லாம்
இல்லையென்ற நிலை!
சமீபக் காலத்தில்
சௌதியில் கூட
இந்த 'சிகேஹ்'
பரவலாக்கப்பட்டதாக அறியவந்தேன்.
அதாவது
வெள்ளி விடுமுறை தினமான
அந்த ஒருநாளைக்கு மட்டுமேயான
ஹலால் திருமணமாக
அது பரிணமித்திருப்பதாக வாசித்தேன்.
கட்டாயம்
விரிவானத் தளத்தில்
பதிவு செய்தே ஆகனும்.
இஸ்லாம்தான் பெண்களுக்கு
எவ்வளவு சுகந்திரம் கொடுத்திருக்கிறது!!
"நீங்கள் அணியும் ஆடையினை ஒத்த
அத்தனை நெருக்க இணைவோடு
மனைவிமார்களை
பேண சொல்லித்தந்திருக்கும்
நம் மதத்தில்
இப்படி நடக்கலாமா?
//தீர பதிவு செய்தே ஆகவேண்டும். //