நகுலன் புயல் நாகூர் வரை தாக்கியிருக்கிறது. அஸ்மாவையும் விட்டுவைக்கவில்லை! ’அஸ்மாவான்னு கேட்டாஹா மச்சான், ஆமாங்கனி, அதுக்கு என்னா இப்போ? என்றேன்’ என்று எழுதுகிறாள். இன்னொரு பெரிய கவிஞர் நேற்று அனுப்பிய எஸ்.எம்.எஸ். இது (கூடன்குளமாவது கொடுவா கருவாடாவது, ஆன்மிகம்தான் முக்கியம்!) :
நான்தான் என்றேன்
என்னை அவருக்குத் தெரிந்தது
எனக்குத்தான் என்னைத் தெரியவில்லை...!
***
அவ்ளவுதான். எளிமையாக எழுதும் இந்த கவிஞரின் பெயர் யாருக்காவது தெரிகிறதா? ’ஜபருல்லாஹ்மாமா’ என்று பாய்ந்தோடு வருகிறார் இஸ்மாயில் பாய். அட, கரெக்ட்! துரை, அப்படியே பரங்கிப்பேட்டை பாய் பஃக்ருத்தீனின் கீழ்க்கண்ட கவிதையையும் வாசித்துப் பாருங்கள். ஃபேஸ்புக்கில் ’விரலோட்டத்தில்’ எழுதியதாம். கையோட்டமே நமக்கு சரிவர மாட்டேங்குது!. ’நீங்கள் ஃபேஸ்புக், லொட்டு லொசுக்கு என்று வேறெங்கும் பதிவிடாமலிருந்தால் இங்கே போடலாம்’ என்று சொன்னேன். ’ஆபிதீன் பக்கங்களுக்காக ஸ்பெஷலா எழுதியனுப்பிட்டு, அங்க பதிஞ்சவுடனே, அந்த லிங்க்க கொடுத்து மத்த லொட்டு லொசுக்குல போட்றேன், சரியா? !’ என்று பதில் அனுப்பி கூடவே. பச்சை நிறப் போர்வையும் , அதான் கட்டுரை (மடலில் பூத்த மனம்), அனுப்பியிருந்தார். அது அப்புறம். இப்பொழுது அவருடைய ’நினைவின் நதி’யில் நனையுங்கள்.
’பெருமை மணக்கும் பரங்கியர் பேட்டை
பெருங்காய வாடை பரப்ப - பெரிதாகப்
பேசிய பேச்சினில் பெற்றது மென்னவோ
வாசித்(து) இடுவீர் வழக்கு!’ -விக்கிப்பீடியா
பெருங்காய வாடை பரப்ப - பெரிதாகப்
பேசிய பேச்சினில் பெற்றது மென்னவோ
வாசித்(து) இடுவீர் வழக்கு!’ -விக்கிப்பீடியா
நன்றி!. - ஆபிதீன்
***
நினைவின் நதி! - இப்னு ஹம்துன்
அவனைப் பார்த்தே
அநேக வருடங்கள் ஆகியிருந்தன
இன்னமும் நினைவிலிருக்கிறது
கடைசியாய் கொண்ட கோபம்.
பள்ளிக்கூடக் குறிப்பேட்டில்
பதிந்திருந்த சச்சரவை
இருவருமே மறக்காமல்
இதயத்தில் குறித்துக்கொண்டோம்
கைகலப்பில் கீறல்கள்
உடலங்கள் மீதில்.
அவ்வப்போது
நினைவின் நதியில்
மிதந்தபடியிருக்கும்
அவனைப் போன்றதொரு முகம்.
பின்னொரு நாள்
பழைய நண்பனின் திருமணத்தில்
பார்வையில் பட்டோம் பரஸ்பரம்
பாறையில் பூத்த மலராய்
பழைய கோபங்களின் மீது
பூத்த புன்னகை
பெருஞ்சிரிப்பாய் வெடித்த போது
நாங்கள்
பால்யத்துக்குத் திரும்பியிருந்தோம்.
வெள்ளம் வடிந்த வீதியில்
சூரியன் சிரித்துக்கொண்டிருந்தான்
பிரகாசமாய்,
***
நன்றி : இஜட். ஜபருல்லாஹ் & இப்னு ஹம்துன் (fakhrudeen.h@gmail.com )
நன்றிகள் ஆபிதீன் நானா.
ReplyDeleteவெள்ளம் விடியட்டும்
சூரியன் பிரிக்கப்படும்
ஆமீன்
நன்றிகள் ஆபிதீன் நானா.
ReplyDeleteவெள்ளம் விடியட்டும்
சூரியன் பிரிக்கப்படும்
ஆமீன்