Saturday, January 28, 2012

குஹூ குஹூ போலே கோயலியா

ஆதி நாராயணராவ் இசையமைத்த ’தேசுலாவுதே தேன் மலராலே’ பாடலை நீண்டநாளாக தேடிக்கொண்டிருந்தேன் , யுட்யூபில். கிடைக்கவில்லை. (மணாளனே மங்கையின் பாக்கியம்) மிகவும் நீளமான படமாதலால் படம் முடிவதற்கு முன்பே விமர்சனம் போட்டுவிட்டதாக பதிவர் ஆர்.வி எழுதியிருந்ததை மிகவும் ரசித்தேன். அவர் மூலம் ஆடியோ மட்டும் http://www.dhool.com/sotd/thesulaavuthE.rm சுட்டியில் கிடைத்தது. cooltoadல் MP3 கிடைக்கலாம். சரி, வியாழனன்று ரூமுக்கு வந்த மஜீதிடம் ’ரா-1’ படத்தில் சின்மயி பாடிய ‘என் உயிர்'-ல் சிலிர்த்ததைச்  சொன்னபோது (மகளார் அனீகா சிபாரிசு செய்திருந்தாள். அவள் சிபாரிசு செய்த இன்னொரு பாட்டு ‘நான் வரைந்த வைத்த சூரியன்’. ‘ நள்ள முழ்ழை இள்ளை; நாறும் கய்யில் இள்ளை” என்று 'மது'ஸ்ரீ மயக்கிய பாட்டு. 'இது என்னட்ட இருக்கு செல்லம், படம் பேரு மறந்துடிச்சி’ ‘ஜெயம்கொண்டான் வாப்பா’ ’ஜெயம் கொன்றானா?’ . சிரித்தாள்) ’இத கேளுங்க நானா’ என்று மனதோடு மனோ நிகழ்ச்சியில் சின்மயி பாடிய ‘குஹூ குஹூ போலே கோயலியா’ பாடலைச் சொன்னார். அட, ஹிந்தி தேசுலாவுதே!. படத்தின் பெயர் ’ஸ்வர்ண சுந்தரியாம்.  இப்போதுதான் பார்க்கிறேன். ரஃபியும் லதாவும் பாடுகிறார்கள். ஆனால் இஸ்மாயில், கண்டசாலா கண்டசாலாதான். தூக்கி ஏப்பம் விட்டுவிட்டார் உங்கள் ரஃபியை!

***


7 comments:

  1. அப்ப லீலாம்மா லதாஜியை முழுங்னது?

    இந்தப் பாடலை re-present பண்றதுல சின்மயி தவிர
    சொக்குதே மனம் பிரியாசுப்பிரமணியன், சோலார் சாய் கூட்டணியும் இதம்

    ReplyDelete
  2. கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை http://adirainirubar.blogspot.com/2012/01/5_28.html

    ReplyDelete
  3. கமெண்டில் உள்ள 'சொல் சரிபார்ப்பு' ஐ நீக்கி விடலாமே!

    ReplyDelete
  4. காதர்பாய், ப்ளாக்ஸ்பாட்-ல் இருக்கிற குழப்பங்கள் போதாதென்று ‘சொல் சரிபார்ப்பு' வேறா? முயற்சி செய்கிறேன். ஆமாம், அதென்ன ’கவிதை - இஸ்லாமியப் பார்வை’? நாகூர் ரூமியிடம் கேட்க வேண்டியதை எல்லாம் இங்கே போட்டால் என்னாவது?

    ReplyDelete
  5. காதர்பாயின் குறிப்பு எனக்கு பயன்பட்டது. நன்றி காதர் பாய்.

    ReplyDelete
  6. Replies
    1. நன்றி செல்வன். நீர் வாழ்க, உம் குலம் வாழ்க!

      Delete