Monday, February 18, 2013

தி.மு.க.,வின் குஷ்பு அரசியல் - தாஜ்தி.மு.க.,வின் குஷ்பு அரசியல் - தாஜ்

தி.மு.க.வின் அரசியல்
அதாவது
கருணாநிதியின் அரசியல்
எப்பவுமே விசேசமானது!

அரசியல் தலைவர்களுக்கு
அரசியல் என்பது
சாணக்கியம் கொண்டதே என்றாலும்
கருணாநிதிக்கு அது
ஓர் கலைஞனின் சாணக்கியமாக
பரிமாணித்து
அதீத விசேசம் கொண்டுவிடும்.

அவரது
அத்தகைய
அதீத விசேசங்கள் குறித்து
பல அரசியல் நிகழ்வுகளை
இங்கே பட்டியல் இடமுடியும்,
சொல்லித்தான் மாளாது.

2-ஜி வழக்கில் தி.மு.க சிக்கிய பிறகு
அரசியலில்
கருணாநிதியின்
அதீத விசேசங்கள் செல்லுபடி
ஆகாது போனாலும்...
அந்த வழக்கின் உக்கிரத்தை
மக்கள் கவனத்திலிருந்து திசை திருப்ப
அவர் நிகழ்த்தும்
அதீத நடவடிக்கைகளுக்கு
அளவே இல்லை!
ஓட்டு போடும் மக்கள்
தி.மு.க.வின்
'2-ஜி எனும் உலகமகா ஊழலை'
மறக்க வேண்டாமா?
மறந்தால்தானே வரும் தேர்தல்களில்
அவர்கள் ஓட்டுப் போட முன்வருவார்கள்!

2-ஜிக்குப் பிறகான
கடந்த மூன்று வருடங்களாக
அதையொட்டிதான்
அரசியலில் கருணாநிதி காய் நகர்த்துகிறார்!
வழக்கில் எதையும் செய்ய முடியவில்லை.
இவர்கள் எந்த விளக்கத்தை முன்வைத்தாலும்
சுப்ரீம் கோர்ட் கடாசிவிடுகிறது.
அது குறித்து மேடையிலும்
எதுவும் பேச முடியாத சூழ் நிலை.
கனிமொழிக்கும், ராஜாவுக்கும்
ஜாமீன் எடுக்கவே
போதும் போதும் என்றாகிவிட்டது.

அதனால்தான்
மக்களின் கவனத்தை திசைத் திருப்ப
இத்தகைய
வறட்டுத்தனமான
அதீத அரசியல்!

நேற்று...
அழகிரி - ஸ்டாலின் இடையேயான
பொய் லடாய்!
இன்றைக்கு 
குஷ்பு அரசியல்!
இடையில்
எப்பவோ அவர்கள் மறந்து போன
டெசோ அரசியல்.

மீடியாக்கள் பெருமளவில்
இத்தகைய விசேச செய்திகளை
ஆர்வமுடன் வெளியிட
மக்களும் மெய்மறந்து
அச்செய்திகளில் பங்கெடுக்கிறார்கள்!

*
'அழகிரி இல்லாத போது
ஸ்டாலின் மதுரை போய்வந்தார்!'

'டெல்லி போகும் வழியில்
கோபாலபுரம் சென்று
அழகிரி தாயாரை கண்டுவந்தார்.
கருணாநிதி அப்போது
அறிவாலயத்தில் இருந்தார்’

'சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்
கலந்து கொண்ட
அழகிரியும் ஸ்டாலினும்
மேடையில் ஆளுக்கு ஒரு பக்கம்
உட்கார்ந்திருந்தார்கள்.
இருவரும் கடைசிவரை
பேசிக் கொள்ளவே இல்லை'
'இந்த வருட
அழகிரியின் பிறந்த நாளுக்கு
ஸ்டாலின் வாழ்த்து சொல்வாரா?'

'அறிவாலயத்தைச் சுற்றி
அழகிரியின் பிறந்ததின
வாழ்த்து போஸ்டர்கள்
ஒட்டப்பட்டிருந்தன!
அதில் அழகிரியை பாராட்டிய
வாசகங்கள் இருந்தன.'

'அழகிரியின் கோவத்தை
அவரது தாயார் சமாதானப் படுத்தினார்.
அந்த சமயம் கருணாநிதி
சி.ஐ.டி.காலணி வீட்டுக்கு
சாப்பிட போய்விட்டார்'

'டெசோ மாநாடு'

'ஐ.நா.சபையில்
இலங்கைத் தமிழர்களின்
உரிமைக்கான மனு!'
'அறிவாலத்திற்கு வந்த குஷ்பு
இன்று புடவைகட்டி இருந்தார்'

'குஷ்புவின் புடவையில்
கடவுள் படம் போடப்பட்டிருந்தது'

'பொது குழுவுக்கு வந்த குஷ்பு
கருணாநிதிக்கு வணக்கம் சொன்னார்.
அடுத்த அறையில் இருந்த ஸ்டாலினுக்கு
குட்மார்னிங்கூட சொல்லவில்லை!'

மக்களை திசைத் திருப்பும்
இதன் தொடர்ச்சியாகத்தான்
இந்த வார
'குமுதம் ரிப்போர்ட்ரில்' வெளியான
வித்தியாசமான செய்தியும் படமும்!
கருணாநிதி அருகில்
மணியம்மை கோலத்தில்
குஷ்பு பவ்வியம் காட்டி நிற்க....
'இன்னொரு மணியம்மையா குஷ்பு?
கொதிக்கும் கருணாநிதி குடும்பத்தினர்கள்!'
என்கிற செய்தி.

கருணாநிதியின் கண் அசைவுக்கு இணங்க
இப்படியான செய்திகளுக்கு
முக்கியத்துவம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்த
மீடியாக்கள் போட்டிபோட்டுக் கொண்டு
நிற்பதுதான் ஆச்சரியம்!
ஒருவகையில்
இதில் ஆச்சரியப்படவும் ஒன்றுமில்லைதான்
திரைமறைவில்
சூட்கேஸ் கைமாற்றப்படும் போது...
எதுவும் நடக்கும்.
எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு!
பெரும்பாலும்
நம் பத்திரிகைகளின்
கற்பும் அப்படியானதுதான்!

அவர்கள் அரங்கேற்றியபடிக்கு
இத்தகைய
அதீத அரசியல் கூத்துக்கள்
சிறப்பாக, திறம்பட நடந்தேறுவதில்
கழகத் தலைமைக்கு மகிழ்ச்சிதான்.
ஓர் கலைஞனின்
சாணக்கியமென்பதென்ன
சும்மாவா பின்னே?

***

நன்றி : தாஜ் | மின்னஞ்சல் : satajdeen@gmail.com

No comments:

Post a Comment