Saturday, April 27, 2019

நிச்சயமாக இது கவிதையல்ல - லரீனா அப்துல் ஹக்


நிச்சயமாக இது கவிதையல்ல
-------------------------------------------------------
முஸ்லிமாக வாழ்தல் கடினமானது
முஸ்லிம் பெண்ணாக வாழ்தல் நரகத்துக்குச் சற்றுக் குறைந்ததுதான்
ஆடையின் அங்குலங்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது
எங்களின் கற்பும் ஒழுக்கமும்
ப்ரஃபைல் பிக்ஸரில் முகம் இருக்கிறதா
ஃபோட்டோக்கள் போடுகிறோமா
எங்கள் 'பேணுத'லின் அளவீடுகள்
அங்கிருந்துதான் தொடங்கி வைக்கப் படுகின்றன
இரவில் ஒன்லைனில் இருந்தாலேயே
பலான கதையாடலில் திளைப்பதாக
கற்பித சேறு பூசுதல்களும் அநாகரிக உள்பெட்டி இடையீடுகளும்
சமூக விமர்சனம் செய்தால்
சுயபரிசோதனைக்காகக் குரல் கொடுத்தால்
மேலைத்தேய சலவைக்கு
மூளையைக் கழுவக்கொடுத்த பெண்ணியவாதிப் பட்டம்
நீயெல்லாம் இஸ்லாம் பேசாதேடி
பொண்டாட்டியை அதட்டுவது போல
கூசாமல் அதட்டும் மானமற்ற பதர்களின்
எகத்தாளம்...
பொதுத்தளத்தில் இணைந்து பணியாற்றினால்
அவனோடு தொடர்பாம், இவனோடு உறவாம் என்று
மனசாட்சியே அற்ற ஈனக் கழிசடைகளின்
மலக் கருத்துகளின் மூக்கைத் துளைக்கும் நாற்றம்
இன்னொரு புறத்தில்
என்னுடைய ஃபர்தாவுக்கும் பயங்கரவாதத்துக்கும்
எந்தத் தொடர்புமில்லை என்பதை
மும்மொழியிலும் அடிக்கடி வழிமொழிந்தாக வேண்டும்
எவனோ இடைநடுவில் திணித்த ஒரு நிகாபுக்காக
என் தலை முந்தானையைப் பறிகொடுக்க
நேர்ந்திருக்கும் அவமான அவலம்
இவ்வளவுக்குப் பின்னும்
முஸ்லிம் பெண் என்ற அதே அடையாளத்தை
சுமந்துதான் திரிகின்றேன்
*
Thanks : Abdul Haq Lareena

Saturday, April 13, 2019

Zakir Hussain with Hariharan (@ Jam Session)


'ஜாகீரு..அந்த தலமுடிய என்னா சிலுப்பு சிலுப்புவ..அப்பா மேரியே ஆயிட்ட போ . வாஹ்! பால் ஹோ கயே..!' - வாசு பாலாஜி (MeWe)
 'Kash Aisa Koi Manzar Hota'
*

*
Thanks : No1 YAARI JAM