'அன்னயும் ரசூலும்’ படத்தில் இடையிடையே வருகிற இந்தப் பாடலில் சஹ்பாஸ் அமானின் கதறல் - ’மவுத்தான மொஹப்பத்’, ’கல்போ முஸீபத்து....’ என்று வரும் இடங்களில் - உலுக்கி விடுகிறது, உண்மையாகவே. இசையமைத்த ‘கே’ என்கிற கிருஷ்ணகுமார் எங்க நாகப்பட்டினத்தில் பிறந்த பொடியன் என்று விக்கி சொல்வது வேறு ஆச்சரியம் தருகிறது. கேட்டுப்பாருங்கள்.
'ஜமிலூனி' என்றால்? It means "cover me". After the Prophet Muhammad (peace be upon him) was
visited by the angel jibrail in the cave, he was afraid and when he went
home, Khadija (ra) comforted and supported him. என்று இணையம் சொல்கிறது , இன்னொரு நஷீதுடன்,
'ஜமிலூனி'யின் அசல் விளக்கத்தை ஜாஃபர்நானாதான் சொல்லவேண்டும். ஏனென்றால் , '(வலது) தோள்பட்டை வலியும் கடுப்பும் தாங்கலே நானா.. போட்டு குடையுது... நம்ம அசனா மரைக்கார்ட்டெகூட சொன்னேன், ஊர்ல இக்கிம்போது..' என்று நேற்று அவரிடம் சொன்னதற்கு , 'அசனாட்டெ பழைய சினிமா பாட்டுதான் கேக்கனும்.. என்னெட்ட மார்க்கம் அப்படி இப்படின்னு கேக்கலாம். ஏன், ஒடம்புவலிக்கும் கேக்கலாம்.. ஜிம்மிகார்ட்டர்ட்டெ போவ சொல்லுவேன்' என்று சொன்னார்.
'அமெரிக்காவுக்கா?'
'சும்மா இருங்கனி, ஜிம்மி கார்ட்டர்னு ஒரு சூப்பர் பிசியோதெரபிஸ்ட் நாவப்பட்டினத்தில இக்கிறாரு.. '
இருக்கட்டும். அடுத்தமுறை ஊர்போகும்போது பார்க்கிறேன். அதுவரை ’ஜமிலூனி’யைக் கேட்க வேண்டியதுதான். அடுத்தவருக்கு அதிகம் வலிப்பது தெரிந்தால் நம் வலி அற்புதமாக குறைகிறது..!
***
Thanks to : ANNAYUM RASOOLUM
+
Shahabas Aman share experiences through ON RECORD on Asianet News