Saturday, April 4, 2015

ஈரானிலிருந்து வரும் இசைக் காற்று

ஈரானிய சினிமாக்களை தொடர்ந்து பார்த்துவரும் நண்பர் கார்த்திக், பார்ஸி மொழியே கேட்பதற்கு இனிமையாக இருக்க இசை எப்படி இருக்கும் என்று தேடி, Rastak  எனும் ஈரானிய நாட்டுப்புற இசைக்குழுவின் நௌரோஸ் ( نوروز‎ ) - பாடலைப் பிடித்து கூகுள் ப்ளஸ்-ல் பகிர்ந்திருந்தார். செவிடனான என்னையே அது பரவசப்படுத்தியது. கேளுங்கள். Thanks to : iraninfo
*


1 comment:

  1. ஈரானிய தீவுகளில் ஒன்றான 'கிஸ்ஸில்'
    சுமார் ஒரு மாத காலம்
    பணி நிமிர்த்தமாக தங்கவேண்டிய சுழ்நிலை.

    அந்தச் சின்ன தீவில் குறுப்பிட்டப் பகுதிகள்தான்
    மக்கள் வாழும் பகுதிகள்.
    நான் அப்படியோர் பகுதியில் தங்கி இருந்தேன்.

    அரை மைலில் கடற்கரை.
    அங்கே ஓர் சமூதாயக் கட்டிடம்.
    அதில் பெரும்பாலான முன்னிரவு நேரங்களில்
    பரம்பரிய இசை கட்சேரியும்,
    மக்கள் தலைவர்களின்
    மதம் -அரசியல் பேச்சுகளும் இருக்கும்.
    ஜனங்கள் குழந்தைக்குட்டிகளோடு
    திரளாக வந்திருந்து கேட்கவும் கேட்பார்கள்.
    அப்போதெல்லாம்,
    நானும் மக்களோடு மக்களாக அங்கிருப்பேன்.

    வசீகரிக்கும் அந்த இசை
    கிட்டத்தட்ட இப்பதிவினையொத்த இசையை ஒத்த இசை!
    அதன் கருவிகளின் இசை எழுச்சியைவிட
    அருகான்மையில் கேட்டுக் கொண்டே இருக்கும்
    கடல் அலையின் ஓங்காரமும் சேர்ந்தப்படிக்கு இருக்கும்!
    சரியாகச் சொன்னால்,
    கேட்டுக்கொண்டே இருக்கும்
    கடல் இசைக்கு ஏற்பவே
    அவர்களது பாடலின் வரிகள் இருக்கும் என்பதை
    கட்டாயம் இங்கே குறிப்பிட வேண்டும்!

    #மறக்க முடியாத தருணம்.

    ReplyDelete