Saturday, April 5, 2014

நல்லவேளை, பாரதி இப்போது இல்லை!

இருந்தால் இஜட். ஜபருல்லாவின் கவிதையை படித்திருப்பான்! இல்லை, 'இஜட்' வேறொன்று சொல்கிறார்...

**
பாரதி
வெறும் -
கதை சொல்லும் புராணங்களே
கவிதைகளாய் வலம் வந்தபோது
சமுதாயம் புதுக்க
விதை போட்டவன் இவன்...!
முதன்முதலில் -
புதுக்கவிதை போட்டவனும் இவன்தான்...!
பாரதி...!

இவன் -
செல்லம்மாவின் புருஷன்..!
கண்ணம்மாவின் காதலன்..!
என்றாலும் -
ரெண்டு பொண்டாட்டிக்காரனல்ல...!

தீக்குள் விரலைவிட்டு
இறைவனை - சுடாமல்
தீண்டும் வழி சொன்னவன்..!

மனுதர்மத்தை தூக்கிப்போட்டுவிட்டு
மனுஷ தர்மத்தை பேணியவன்..!
குழந்தைகளையும்
ரெளத்ரம் பழகத்தூண்டிய
சூத்ரதாரி...!

பூணூலை வெறுத்தான்..!
புதுநூல்கள் படைத்தான்..!

"சாதிகள் இல்லையடி பாப்பா"
என்றவனும் இவன்தான்..!
இந்த கேடுகெட்ட உலகில்
சாதி இருந்துதான் ஆகவேண்டும் எனில்
"காக்கைக் குருவிகளும் எங்கள்சாதி..!"
என -
சாதியை சமநீதியாக்கியவன்..!

"ஆடுவோமே..! பள்ளுபாடுவோமே..!
ஆனந்த சுதந்திரம் வந்துவிடும்"
- என்று சொன்ன ஜோஸ்யன் அல்ல..!
"ஆனந்த சுதந்திரம்" அடைந்துவிட்டோம் - என்று
சொன்ன "தீர்க்கதரிசி."

நல்லவேளை...!
இப்போது பாரதி இல்லை...!
இருந்தால் -
அரசியல்வாதிகள் நிலை....?

***

நன்றி : கவிஞர் இஜட். ஜபருல்லாதேர்வும் தட்டச்சும் : ஹமீதுஜாஃபர்

1 comment:

  1. //நல்லவேளை...!
    இப்போது பாரதி இல்லை...!
    இருந்தால் -
    அரசியல்வாதிகள் நிலை....?// இவருக்காக ஸ்பெஷல் வாடகை கொலையாளியை நியமித்திருப்பார்கள்! - தாஜ்

    ReplyDelete