Monday, March 4, 2013

விழிப் புணர்வு - விபரீத மஜீதின் விடுகதை

எச்சரிக்கை : பெரியவர்கள் படிக்க வேண்டாம். சுஜாதாவின் பத்து கட்டளைகள் பார்த்துவிட்டு, 'நம்மகிட்ட 10 பாய்ன்ட்ஸ் தான் இருந்துச்சு - அனுப்பிட்டேன்’ என்று அனுப்பியிருக்கிறது 'ஹாரிபிள் ஹஜ்ரத்' புகழ் வில்லங்கம். கொஞ்சநேரம் சோகமாக இருக்க எங்கே விடுகிறார்கள் நம்மை? சரி, விழிப்புடன் புணரவும், சே, உணரவும். - ஆபிதீன்
***

 
விழிப் புணர்வு

தமிழ்நாட்டில் பலநிலைகளிலும் விழிப் புணர்வு (ஒரே வார்த்தைங்க; கீ போர்ட் எர்ரர்) அதிகரித்திருக்கிறதா என்ற சிந்தனையில் இருந்தபோது வந்து சேர்ந்த நண்பர் ஒரு விடுகதை போட்டார்:
சுட்ட மொளகா நட்டமே நிக்குது – அப்டின்னா என்னன்னு.
வெளங்கிரும்னு நெனச்சுக்கிட்டே,
‘குடைக்கம்பு’ தானேன்னு வெடைச்சேன்
ஏளனமாப்பாத்து, என் அறியாமையை பறைசாற்றினார்.
விடுவேனா? 
ஒரு பேப்பரைக் கையில கொடுத்து, இதுல 10 பாய்ன்ட் சொல்லிருக்கேன், வெடைக்காம விடையைச் சொல்லுங்க பாப்போம்ன்னேன். படிச்சுப் பாத்தார்:
 
1. பிரளயமே பெருக்கெடுத்தாலும் பாதுகாப்பா இருக்கும்
2. உயர் தொழில்நுட்பத்தில் உருவான வெளிச்சுவர்,  மிகவும் கடினமான சூழ்நிலைகளில்கூட பாதுகாப்பாக செயல்படும்
3. பயன்பாட்டுக்குப் பிறகும்கூட பாதுகாப்பாக அழிக்கமுடியும்
4. கழிவுப்பொருட்களை பாதுகாப்பாகவும் எளிதாகவும் அகற்றிக்கொள்ள முடியும்
5. சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தக்கேடும் விளைவிக்காது
6. தயாரிப்புச் செலவும் மிகக் குறைவு
7. எதிர்காலச் சந்ததியின் நல்வாழ்வுக்கு இது நல்லது
8. எந்தச் சூழ்நிலையிலும் முரட்டுத்தனமான பயன்பாட்டிலும்கூட கசிவே இருக்காது
9. இப்படியெல்லாம் தயாரிப்பாளர்கள் சொல்வதை அரசாங்கமும் ஆதரித்து இதன் பயன்பாட்டை ஊக்குவிக்கும்
10. இதற்கு ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும்  எப்பவுமே உண்டு
எதிர்ப்பாளர்கள் எப்போதும் சொல்வது: ஒருவேளை கசிவு ஏற்பட்டுவிட்டால், நமக்கும் எதிர்கால சந்ததிக்கும் வாழ்வு ரொம்பவும் கஷ்டமாப் போயிரும்.
இப்ப சொல்லுங்க, இது என்னன்னு கேட்டேன்.
பட்டுனு பதில் சொல்லிட்டார்: அணு உலை
 
கொஞ்சம் இருங்கன்னு சொல்லிட்டு,
அந்தவழியாகப் போன ஒரு இளைஞனிடம் காட்டி,
நீ சொல்லு தம்பி, இது என்னன்னு கேட்டேன்
பட்டுனு அவனும் சொன்னான்: ஆணுறை
 
கோபமும் சங்கடமுமான நண்பரிடம் விடுங்க பாஸ், இவய்ங்க இப்டித்தான், நீங்க உங்க கதையை விடுவிங்கன்னு கேட்டேன். ஒரிஜினல் விடையைச் சொன்னார்: யோவ் அது குருதுய்யா (குதிர்)

***
நன்றி : மஜீத் | மேலும் சில விடைகள் அறிய :   amjeed6167@yahoo.com

3 comments:

  1. விடுகதை என்றபோதே வில்லங்கம் வருதுன்னு நெனச்சேன். நெனச்சதுபடியே வந்துடுச்சு. சுத்து சுவர் ஸ்டார்ங்குன்னு சொன்னபோதே அயிட்டத்துலெ கையெ வைக்கிறார்னு தெரிஞ்சுப்போச்சு. உங்களை மாதிரி ஊருக்கு ஒருத்தர்.... உஹூம் நீங்க ஒன்னே போதும் ஒலகம் உருப்புட்ட மாதிரி....

    அது சரி ஒறையோட சேர்த்து மொத்தமா வாய்குள்ளே போட்டுக்குதே அதுக்கு என்ன கதை வச்சிருக்கீங்க ஹஜரத்து...?

    ReplyDelete
  2. இத ஆபிதீன் hot பக்கம்னு வைக்கலாம

    ReplyDelete
  3. மஜீத்...
    விசேசமா எழுதுறவர்
    அரது எழுத்து நிறம்காட்டும்
    நகைச்சுவையும்
    வித்தியாசமா இருக்கும்.

    இங்கே...
    இளைஞர்களை விழிப்புண்வு
    ஏற்படுத்தும்வகையில் எழுதி இருக்கிறார்.
    வாலிபர்கள் படிக்கக் கூடுமெனில்
    அவர்களுக்கு அதிக பயன் தரும் இது.

    வேறு கோணத்தில் எழுதி இருந்திருக்கலாம்.
    ரொம்ப நாளைக்குப் பிறகு
    வரும் அவரது எழுத்தை
    ரொம்பவும் நம்பிக் கொண்டு இருந்தேன்.

    ReplyDelete