Saturday, March 16, 2013

கொல்கிறார்கள்... கொல்கிறார்கள்...

தாராபுரத்தில் பிறந்து, மடத்துக்குளத்தில் வளர்ந்து, படித்து, மடத்துக்குளம், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நாக்பூர், சென்னை... என பல ஊர்களிலும் அலைந்து இப்போது தில்லியில் உளைந்து கொண்டிருப்பவன் என்று தன்னைக் குறிப்பிடும்  நண்பர் 'புதியவன்’ ஷாஜஹான்  ('சமத்து ஷாஜஹான்' என்பார் தாஜ்!) ப்ளஸ்-ல் எழுதிய வரிகள் இவை. அவசியம் கருதி அனுமதி பெறாமலே பதிவிடுகிறேன். - ஆபிதீன்

***

முஸ்லிம்கள் இந்துக்களைக் கொல்கிறார்கள் என்கிறார்கள் அவர்கள்
இந்துக்கள் முஸ்லிம்களைக் கொல்கிறார்கள் என்கிறார்கள் இவர்கள்
கிறித்துவர்கள் முஸ்லிம்களைக் கொல்கிறார்கள் என்கிறார்கள் அவர்கள்
முஸ்லிம்கள் கிறித்துவர்களைக் கொல்கிறார்கள் என்கிறார்கள் இவர்கள்
சிங்களர்கள் தமிழர்களைக் கொல்கிறார்கள் என்கிறார்கள் அவர்கள்
தமிழர்கள் சிங்களர்களைக் கொல்கிறார்கள் என்கிறார்கள் இவர்கள்.
அவர்கள் இவர்களையும் இவர்கள் அவர்களையும் கொல்கிறார்கள்
என்னும் இரைச்சலில்
மறைந்து போகிறது சிலருக்கு மறந்து போகிறது
மனிதர்கள் மனிதர்களைக் கொல்கிறார்கள் என்பது.

***



நன்றி : ஷாஜஹான் | http://www.facebook.com/shahjahanr

5 comments:

  1. //சிலருக்கு மறந்து போகிறது
    மனிதர்கள் மனிதர்களைக் கொல்கிறார்கள் என்பது.// ஆமாம். அடுத்தவர்கள் நினைவூட்டுகிற போதுதான் நாம் மனிதர்கள் என்பதே நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புனிதம் வாழ்கிற மாதிரி, அரக்கமும் வாழ்கிறது. மனிதனென மனிதனுக்கு நினைவூட்டிய மனிதன் ஷாஜஹானுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எளிமையான வடிவில் ஒரு நல்ல கவிதை.

      மிருகங்கள் அவை மிருகங்களாகவே இருக்கின்றன.

      'மனுசனா நடந்துக்கோடா!' என மனிதன் தான் அறிவுறுத்தப்படுகின்றான்.

      Delete
  2. அனுமதி பெறத் தேவையில்லை என அறிந்து பகிர்ந்தீர்கள் ஆபிதீன், உங்கள் அங்கீகாரம் எனக்குப் பெரிது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீர்கள் ஷாஜஹான் பாய். நான் ரொம்ப சாதாரணமானவன். ஒன்றும் சொல்லமாட்டீர்கள் என்ற துணிச்சலில் ‘நெசவுக்காரன்’ கவிதையைத்தான் பதிவிடலாம் என்று நினைத்தேன். தேடியதில் இது கிடைத்தது. அவ்வளவுதான். உங்கள் பக்கத்தை தொடர்ந்து வாசிக்கிறேன். நன்றி.

      Delete
  3. நானெல்லாம் எவ்ளோ ஃபாஸ்ட்டு பாருங்க. இன்னிக்குதான் இதைப் பார்க்கிறேன். சரி, நெசவுக்காரனும் தாராளமா போடலாம்.

    ReplyDelete