Thursday, December 25, 2014

மக்காவில் ஏசுநாதர் !

'மக்கால ஏசு இக்கிறாஹாம்மா' என்று ஓடிவந்து அஸ்மா காட்டினாள், குமரன் தங்கமாளிகை காலண்டரை. ‘நிச்சயமாக எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் செய்து இன்னும் தங்கள் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிகின்றார்களோ அவர்களே சுவனபதிக்குரியவர்கள்; அங்கு அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள் (குர்ஆன் 11:23).’ என்று குயீன்மா கோல்டுஹவுஸ் காலண்டரில் இன்று (ரபியுல் அவ்வல் 2) போட்டிருப்பதை நானும் காட்டினேன்.

'ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்’ (எபேசியர் 2:10; Ephesians 2:10 )
**
அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்ய மதுரமாமே...
***

1 comment:

  1. கூகுள் ப்ளஸ்-ல் ஜாஃபர்நானா : ஆபிதீன், அஸ்மா சொன்னாகன்னு நீங்களும் போட்டுட்டீங்க. இது பஞ்ச பாண்டவர் கதை மாதிரில்ல இக்கிது. மக்கான்னு சொல்லிட்டு மதினா போட்டவை போட்டிருக்கீங்களே...!

    ஆபிதீன் : //மக்கான்னு சொல்லிட்டு மதினா// மக்கா நான்? காமெடியே அதுதானே நானா!

    ReplyDelete