Sunday, July 27, 2014

Take The Lead டான்ஸ்!

நோன்புப் பெருநாள் சமயத்தில் கவாலி, கஜல் என்று போட்டு அலுத்துவிட்டது. ஒரு மாறுதலுக்கு இந்தப் பதிவு.  இருமடங்கு சாப்பிட்டவர்கள் இலகுவாக இளைக்க இது உதவும். 'The first song is Wanna Ride by Wisin y Yandel and the second song is Teach Me How To Dance by Che'Nelle' என்கிறார் Maddy D .  'டான்ஸ் கீன்ஸ்லாம் ஹராம்ங்க..'  என்பவர்கள் , 'நான் ஒரு நாய். என்னைவிட பகுத்தறிவில் குறைந்த மிருகங்களாகிய மனிதர்கள் நீங்கள் என்பதால் உங்களுக்கு நீங்களே 'நாய்கள் பேசுவதில்லை' என்று சொல்லிக்கொள்கிறீர்கள். எனினும் பிரேதங்கள் பேசுகின்ற, அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பேயில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தும் பாத்திரங்கள் வருகின்ற கதையை மட்டும் நீங்கள் நம்புவீர்கள். நாய்கள் பேசும். ஆனால் கேட்பது எப்படி என்று தெரிந்தவர்களிடம் மட்டும்' என்று 'நான் ஒரு சிவப்பு' நாவலில் ஓரான் பாமுக் எழுதியது குறித்து யோசிக்கலாம். அல்லது எட்வர்ட் சயீதின் நேர்காணல் பார்க்கலாம். நன்றி. ஈத் முபாரக்!
**
**
Thanks to : ANCIENTTALES , Sadiq

No comments:

Post a Comment