Thursday, January 17, 2013

அப்துல் காதரும் ஐந்து ஈக்களும்! - ஹமீதுஜாஃபரின் ‘மைக்ரோ’ கதைகள்

பெருசு பெருசா (அருட்கொட்டையாளர்களை) காட்டிக்கிட்டிருந்த நம்ம நானா, இப்ப அவரோட சின்னத காட்டுறாரு.. நல்லா பாத்துட்டு , நல்லாயில்லேன்னா நாகரீகமா அவர திட்டுங்க. உருப்படியான ஒரிஜினல் துளிக்கதைகள் வேணுமின்னா இங்கே போங்க. (நானாவுடயத ’ஒரு மார்க்கமா’ பாத்துட்டு அந்த காரைக்குடி கலாட்டா பேர்வழி புதுசா ஏதும் காட்டாம இரிக்கணும்). ஒண்ணு புரியுது... இந்தியா-பாகிஸ்தான் உறவுக்கு நானாவின் முயற்சி நிச்சயம் உதவும்! - ஆபிதீன்
 
***
 
1. தம்பிட வாப்பா பேரு!
 
’பெயரைச் சொல்லலாமா கணவன் பெயரைச் சொல்லலாமா ஊரைச் சொன்னாலும் உறவை சொன்னாலும் உற்றவரிடத்தில் எதனை சொன்னாலும் ...’   என்று கண்ணதாசன் வாயிலாகச் சொல்கிறது தமிழ் பண்பாடு.
 
அந்தப் பண்பாட்டில் நாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவரல்ல என்பதில் ரஹமத்துல்லாவின் மனைவி ஜொஹரம்மா ஒர் உதாரணம். தன் கணவன் பெயரை எந்த சந்தர்ப்பத்திலும்கூட உச்சரித்ததே இல்லை. தொழுகையில் தன் கணவன் பெயர் வருவதால் பெயரை மாற்றிக்கொள்ளும்படி பலமுறை சொல்லிப்பார்த்தாள்.  ரஹமத்துல்லா என்ற பெயரை மாற்றுவதாக அவள் புருசன் இல்லை. அதனால் தொழுதுவிட்டு சலாம் கொடுக்கும்போது ’அஸ்ஸலாமு அலைக்கும் ரஹமத்துல்லா’ என்று சொல்லணுமே அதற்கு பதிலா “அஸ்ஸலாமு அலைக்கும் தம்பிட வாப்பா பேரு, அஸ்ஸலாமு அலைக்கும் தம்பிட வாப்பா பேரு” என்றுதான் சொல்லுவாள்.
 
ஒரு முறை பக்கத்துவீட்டு கொலுசம்மா கேட்டதற்கு, ’அஹ பேரை சொல்றது மருவாதை கொறைவுல, அதனாலெதான் அஹ பேரு வர்ற எடத்துலெ தம்பிட வாப்பா பேருன்னு சொல்றேன் அல்லா ஒன்னும் கோவிச்சக்கமாட்டான்’ என்று ஒரு போடு போட்டாள்.
 
***

2. நூர் கணக்கு!
 
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி விலாவாரியா விசாரிச்சு எழுதுறது லேசுபட்ட வேலையல்ல. அதிலும் முஸ்லிம் தெரு கொஞ்சம் கஷ்டம். பெயர் உச்சரிப்பு சரியாக எழுதவராது என்று தெரிந்தே வேலையை ஒப்புக்கொண்டிருந்தார் வடிவேல்சார்.
 
ஒரு வீட்டில் கணக்கெடுக்கும்போது, உங்க புருசன் பேர் என்னம்மா என்று கேட்டார் வாத்தியார். புருசன் பேரை சொல்லக்கூடாது இல்லையா? அது நமது தமிழ் பண்பாடாச்சே! அந்த பண்பாட்டை அப்படியே கடைபிடித்துக் கொண்டிருந்தது அந்த அம்மாவும். அதனால் இப்படி சொன்னது செந்தமிழ் தாய், “முப்பது முப்பது மூணு முப்பது, ஒரு பத்து, அதுகூட முகம்மது.” 
 
எதோ விடுகதை மாதிரி இருக்கே என்று தோன்றியது வாத்தியாருக்கு. கணக்கு வாத்தியாராச்சே எண்ண ஆரம்பித்துவிட்டார். மூணு முப்பது தொன்னூறு அதோட ஒரு பத்து நூறு. “நூர் முஹம்மதாம்மா உங்க வீட்டுக்காரர் பேரு” என்றார். ஆமாம் என்று தலையை ஆட்டியது அந்த தமிழ் தாய்.
 
***
 
3. செந்தமிழ் தாய்!
 
அழுதுகொண்டே வந்த அஹமது மரைக்கான், அம்மாவிடம் ’வாத்தியார் காதை திருகிட்டார் வலிக்கிறது’ என்றான். உம்மாவின் ஒரே செல்லப்பிள்ளை எப்படி அவர் திருகலாம் என்று பையனையும் அழைத்துக்கொண்டு ஸ்கூலுக்கு புறப்பட்டுவிட்டாள் சபியா.
 
“ஓய் வாத்தியாரே! கறவு போல முறுவு இருக்க காறெ புடிச்சு ஏங்கனி திருவுனியும்” என்று ஏக வசனத்தில் கேட்க, வாத்தியாருக்கோ ஒன்றும் புரியவில்லை.
 
அது ஒன்னுமில்லெ சார், “கதவுபோல முதுகு இருக்க காதை ஏன் திருகுனீங்க”ண்ணு கேட்கிறாங்க என்றான் பக்கத்து வீட்டு சித்தீக்.
 
***

4. அப்துல் காதரும் ஐந்து ஈக்களும்
 
’மூனு பொம்பளை ஈ யும் ரெண்டு ஆம்பளை ஈ யும் அடிச்சுட்டேன்’ என்று பெருமையாக சொன்னான் அப்துல் காதர்.
 
’அது என்ன ஆம்பளை ஈ பொம்பளை ஈ, உங்களுக்கு எப்படி தெரியும்?’ என்று கேட்டாள் சுபைதா.
 
’ரொம்ப ஈஸி, டிவி மேலே உட்கார்ந்திருந்தது பொம்பளை ஈ, ஒரு இடத்துலெ ஒழுங்கா உட்காராமெ பறந்துக்கிட்டிருந்தது ஆம்பளை ஈ’.
 
***
 
நன்றி : நானாக்கு அல்ல, மஞ்சக்கொல்லை மக்களுக்கு!

13 comments:

  1. //அதனால் தொழுதுவிட்டு சலாம் கொடுக்கும்போது ’அஸ்ஸலாமு அலைக்கும் ரஹமத்துல்லா’ என்று சொல்லணுமே அதற்கு பதிலா “அஸ்ஸலாமு அலைக்கும் தம்பிட வாப்பா பேரு, அஸ்ஸலாமு அலைக்கும் தம்பிட வாப்பா பேரு” என்றுதான் சொல்லுவாள்.//

    சூப்பஎ நாநா... சூப்பர்.
    -தாஜ்

    ReplyDelete
    Replies
    1. தாஜ், எனது 'ருக்உ' குறுநாவலில் வரும் குஞ்சாலிமரைக்கார் ஜோக்கும் ஜாஃபர்நானா சொன்னதுதான். நாகூர்ஜனங்கள் பயப்படும் மனிதர்கள் எல்லாருமே அந்த சின்னோண்டு மஞ்சக்கொல்லையில்தான் இருக்கிறார்கள்!

      Delete
    2. ஆமாம் ஆபிதீன்...
      அதை அப்போ படித்து சிரித்ததினால்
      இப்பவும் அந்த சிரிப்பு
      வெடித்து கிளம்பிவிட்டது.
      -தாஜ்

      Delete
  2. ஜஃபார் நானா! அஸஸலாமு அலைக்கும்.
    ஒரு வார காலமாக அரசினர் மருத்துவமனையில் விருந்தினராக இருந்து விட்டு நேற்று மாலை வீட்டுகு வந்தேன். இன்று ஆபிதீன் பக்கங்களைத் திறந்த போது உங்கள் கதைகளைப் படித்து நானும் மகன் ஸபீரும் வயிறு குலுங்கச் சிரித்தோம். உங்களுக்கு இப்படியும் கதை சொல்லத் தெரியுமா சீதேவி. இந்தக் கதைகளுக்கு ஹைக்கூ கதைகள் என்று வைப்போமா? அல்லது கடுகுக் கதைகள் என்று அழைப்போமா?
    இனிமேல் கதைகள் இப்படித்தான் எழுத வேண்டும் போல் தெரிகிறது. தொடர்ந்து எழுதுங்கள் நானா. உங்களூர் தமிழ் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது. உங்கள் உடல் உள நலன்களுக்கு அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு ஹனிபா நாநா...
      உடல் நலம் தேவலாமா?
      உங்கள் ஞாபகம்
      அடிக்கடி எழுந்துக் கொண்டிருக்கிறது.
      -தாஜ்

      Delete
    2. ஜஸாகல்லாஹு கைரா

      Delete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்,
    அன்புள்ள ஹனிபா காக்கா, நீங்கள் நலமாகா வீடுதிரும்பியது மெத்த மகிழ்வைத் தருகிறது. அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் கூடவே ஆரோக்கியத்தையும் தர துஆ செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஜஸாகல்லாஹு ஹைரா

      Delete
  4. ஹமீது நானா

    செந்தமிழ்த்தாய் கதையில் வரும் புனைவு 1972ம் ஆண்டே மலேசியா நாளேடு தமிழ்நேசனில் ஏ.வி.எம் ஜாபர்தீன் ஆவர்களால் எழுதப்பட்டது.

    ReplyDelete
    Replies
    1. இது நானாவின் செந்தமிழ் காப்பி போல!

      Delete
  5. ஒரு காய்ச்சல்ல கெடந்து எந்திரிச்சு வர்றதுக்குள்ள
    எம்புட்டோ நடந்துருது
    சூப்பர் ஜாஃபர்நானா!

    ஹனிபாக்கா வரவுக்கு ரொம்ப சந்தோஷம்
    (இன்னொரு கரவு ஜோக்கும் இருக்கு நம்மட்ட!!)

    ReplyDelete
    Replies
    1. இப்பவே எடுத்து வுடுங்க மஜீது , அந்த கரவு ஜோக்கை.

      Delete
  6. மஜீது அனுப்பிய கரவு ஜோக்கை இங்கேயே போட்டுடுறேன்..
    **
    புள்ளை சரியாக் கத்துக்கிற மாட்டேங்கிறான்னு கண்டிச்சுப்பாத்த வாத்தியார்,

    ஒண்ணும் சரியா வராது போகவே

    நாளைக்கு ஸ்கூலுக்கு வரும்போது வாப்பாவோடதான் வரணும்னு சொல்லிவுட்டாராம்.



    மறுநாள் வாப்பாவும் வந்து என்னன்னு விசாரிக்க,

    ஒங்க பையனைப் பாருங்க சொல்லிக்குடுத்ததை ஒழுங்கா சொல்லமாட்டேங்குறான்.

    பையன்ட்ட வாத்தியார், டேய் இங்க வான்னார்.



    சொல்றா, கதவு.....

    பையன்: கரவு

    வாத்தியார்: இங்க பாரு, கதவுடா...

    வாத்தியார்: எங்க சொல்லு, க

    பையன்: க

    வாத்தியார்: த

    பையன்: த

    வாத்தியார்: வு

    பையன்: வு

    வாத்தியார்: கதவு

    பையன்: கரவு



    பையனோட வாப்பா பொறுமையிழந்து: அட ச..மவனெ, க, த, வு.... கரவுன்னு சொல்லத்தெரியாதாடா ஒனக்கு?

    ReplyDelete